தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/முட்டை சாப்பிட்டால் காய்ச்சல் அதிகமாகும்!

முட்டை சாப்பிட்டால் காய்ச்சல் அதிகமாகும்!

முட்டை சாப்பிட்டால் காய்ச்சல் அதிகமாகும்!


PUBLISHED ON : அக் 03, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புரதச் சத்து அதிகம் தேவை என புரதச் சத்து அதிகம் உள்ள உணவாக தேடித் தேடி சாப்பிடுகின்றனர். அதிலும் தினமும் முட்டை சாப்பிடுவோர் அதிகம்.

காய்ச்சல் இருக்கும் நாட்களில், புழுங்கல் அரிசி நொய் கஞ்சி, ரசம், அரிசி சாதம் தவிர, வேறு எதுவும் சாப்பிட வேண்டாம். இரண்டு, மூன்று நாட்களுக்கு இந்த பத்திய உணவு சாப்பிட்டால், செரிமானத்திற்கு எளிது; நோய் விரைவில் குணமாகும். தனியா விதையை வறுத்து துவையல் செய்து சாப்பிடலாம்.

காய்ச்சல் இருக்கும் போது புரதம் சாப்பிட வேண்டும் என முட்டை சாப்பிடுகின்றனர். முட்டை சாப்பிடுவது காய்ச்சலை இன்னும் அதிகப்படுத்தி விடும். காய்ச்சல் சரியானவுடன் அசைவ உணவு சாப்பிடாமல், நான்கைந்து நாட்கள் கழித்து 'சூப்' குடிக்கலாம்.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து குழம்பு சாப்பிடலாம். வறுத்த, பொரித்த வகைகளை தவிர்ப்பது நல்லது.



கீரை


எல்லா வகை கீரையும் குளிர்ச்சியை ஏற்படுத்தும்; அதே நேரத்தில் செரிமானத்தில் மந்தத் தன்மையும் வரும். தொற்று காலத்தில் மாதம் இரண்டு முறை கீரை சாப்பிட்டால் போதும்; தொடர்ச்சியாக சாப்பிட வேண்டாம்.

பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகள் சாப்பிடுவதை குறைத்து, பூமிக்கு மேல் விளையும் காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம். சூடான உணவு சாப்பிடலாம். சூடு செய்து சாப்பிடுவது, குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்கவும் .

தயிருக்கு பதில் தாளித்த மோர், துாதுவளை, கறிவேப்பிலை, இஞ்சி, பருப்பு துவையல் என, தினமும் ஏதாவது ஒரு துவையல் சாப்பிட வேண்டும். இரவு உணவை 8:00 மணிக்குள் முடித்தால், செரிமானத்தை சீராக வைக்கும்.

எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் தினமும் அவசியமா?

'விட்டமின் சி' நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க சிறந்த வழி தான். ஆனால், இது எல்லாருக்கும் பொருந்துமா என்றால் கிடையாது. ஒரு சிலருக்கு, எலுமிச்சை சாறு குடித்தால் சளியை உண்டு பண்ணும்; அவர்கள் இதை தவிர்க்க வேண்டும். நமக்கு ஒவ்வாத பொருளை சாப்பிட்டால் உடம்பு ஏற்றுக் கொள்ளாது.

அதே போன்று கமலா ஆரஞ்சு, பலாப்பழம் இரண்டும் சளியை அதிகரிக்கக் கூடியது; இவற்றை தவிர்த்து விடலாம்.

கறுப்பு திராட்சை நுரையீரலை பலப்படுத்தும்; சுத்திகரிக்கக் கூடிய தன்மையும் உடையது. அன்னாசி பழம் சாப்பிடலாம்.

பழம் மட்டுமே ஒரு வேளை உணவாக சாப்பிடுவது கூடாது. காலை 11:00 மணி அல்லது மாலை 7:00 மணிக்கு பழம் சாப்பிடலாம்.

டாக்டர் மது கார்த்தீஷ்,

சித்த மருத்துவர், சென்னை,

99944 93687


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us