குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - உடல் எடையை சீராக வைக்கும் புரதம்!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - உடல் எடையை சீராக வைக்கும் புரதம்!
PUBLISHED ON : ஆக 11, 2019

கொழுப்பு மட்டும் இருக்கும், 'பேலியோ டயட்' மற்றும் தினம் ஒரு உணவு அட்டவணையைப் பின்பற்றச் சொல்லும், ஜெனரல் மோட்டார்ஸ் டயட் என்று தினமும், ஒரு புதிது புதிதாக, 'டயட்' அறிமுகமாகிறது. இவையெல்லாம், ஒரு வாரத்தில், 5, 10 கிலோ, எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு வேண்டுமானால், உடனடி தீர்வைத் தரலாம்; நீண்ட நாட்கள் தொடர்ந்து, இது போன்ற குறிப்பிட்ட வகை டயட்டை, பின்பற்றினால், பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
குறிப்பாக, அல்சர், வாயுத் தொல்லை, உணவு சாப்பிட்டு முடித்தவுடன், மேல் நோக்கி வரும் எதக்கலிப்பு போன்ற பிரச்னைகள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
எந்த, டயட்டையும், வாழ்க்கை முழுவதும் பின்பற்ற முடியாது; பின்பற்றுவதும் நல்லதல்ல.
நம்முடைய உடல் அமைப்பிற்கு, கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், கொழுப்பு, தாதுக்கள் என்று அனைத்து சத்துகளும் சமச்சீராக கிடைப்பது தான் சரி. ஆனால், ஒவ்வொரு வகை டயட்டிலும் புரதம், கொழுப்பு என்று குறிப்பிட்ட சத்துகளை மட்டும் பிரதானமாக சாப்பிடுவதால், சமச்சீராக அனைத்து சத்துகளும் கிடைக்காமல், எந்த சத்து குறைகிறதோ, அது தொடர்பான பிரச்னைகள் வரும் வாய்ப்பும் உள்ளது.
அவரவர் எடையில், 1 கிலோவிற்கு, 1 கிராம் என்ற, அளவில், தினசரி உணவில், புரதம் இடம் பெற வேண்டும். போதுமான அளவு புரதம் சாப்பிட்டாலே, உடல் எடை சீராக இருக்கும்.
டாக்டர் தீபக் சுப்ரமணியம், சென்னை. 044 - 4524 2424
