sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - அரசு பள்ளி மாணவியர் முதலிடத்தில்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - அரசு பள்ளி மாணவியர் முதலிடத்தில்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - அரசு பள்ளி மாணவியர் முதலிடத்தில்!


PUBLISHED ON : ஜூலை 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 28, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எதிலும் ஆர்வம் இல்லாமல், சோர்வாக இருப்பதாக, என்னிடம் மருத்துவ ஆலோசனைக்கு வரும் பெற்றோர் அடிக்கடி கூறியதைத் தொடர்ந்து, 13 -18 வயதிற்குட்பட்ட, 300 குழந்தைகளின் உடல் நலத்தை ஆய்வு செய்தேன். இந்த ஆய்வின் அடிப்படையில், நான் எழுதிய கட்டுரை, சர்வதேச மருத்துவ இதழில், சமீபத்தில், வெளியாகி உள்ளது.

குழந்தைகளிடையே, உடல் பருமன் கோளாறு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளைக் காட்டிலும், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், அதிகம் உடல் பருமனோடு உள்ளனர். நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாவது இன்னும் அதிகம். இதில், கவலை தரும் விஷயம், ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகள் அதிக உடல் எடையுடன் உள்ளனர்.

ஹார்மோன் மாற்றங்கள், இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றாலும், அடி வயிற்றுப் பகுதியில் சதை போடுவதற்கு காரணம், போதுமான உடற்பயிற்சி இல்லாதது; அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிடுவது.

உடல் பருமன் அதிகம் உள்ள குழந்தைகள், எதிர்காலத்தில், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் அபாயம், மற்ற குழந்தைகளைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகம் உள்ளது.

டாக்டர் ராதா குமார், சென்னை.

drradhakumar15@yahoo.co.in


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us