sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/வேலை செய்தால் தான் எலும்பு பலம் பெறும்!

வேலை செய்தால் தான் எலும்பு பலம் பெறும்!

வேலை செய்தால் தான் எலும்பு பலம் பெறும்!


PUBLISHED ON : ஜூன் 12, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாதவிடாய் முடிந்த பின் எல்லா பெண்களுக்கும், கால்சியம் குறைபாடு வருவதால், 'வைட்டமின் - டி' குறைபாடு உள்ளது. 'லாக் டவுன்' காலத்தில் 'ஒர்க் பிரம் ஹோம்' என்று யாரும் வெளியில் போகாததால், வைட்டமின் - டி குறைபாடு அதிகரித்து உள்ளது. 10 பெண்களுக்கு பரிசோதனை செய்தால், ஏழு பேருக்கு குறைபாடு உள்ளது.

மிதமான குறைபாடு என்றால், காலை 11:00 மணிக்கு முன், 25 நிமிடங்கள் சூரிய ஒளி படும்படி இருந்தால் போதுமானது. 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, உலகம் முழுதிலும் எலும்புகள் பலவீனமாகும் பிரச்னை உள்ளது.

நம் நாட்டில், பிரச்னை வந்தால் மட்டுமே ஆலோசனைக்கு வருகின்றனர். வேலை கொடுத்தால் தான் எலும்புகள் பலம் பெறும்; நடந்தால் தான் கால் வலிமை பெறும்; உடற்பயிற்சி அவசியம்.

உடல் பருமன் என்பது கொரோனா போன்றே தொற்று நோய் ஆகிவிட்டது. உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன், 90 சதவீதத்தினர் இல்லை. இப்படியே விட்டால், இன்னும் எடை அதிகமாகி உடல் பருமன் ஆகி விடும். இதற்கும் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி தான் முக்கியம்.

டாக்டர் திவ்யாம்பிகை,

மகளிர் நல மருத்துவர்,

சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us