தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/'இதய நோயாளிகள் ஆர்த்ரோஸ்கோபி செய்யலாமா'

'இதய நோயாளிகள் ஆர்த்ரோஸ்கோபி செய்யலாமா'

'இதய நோயாளிகள் ஆர்த்ரோஸ்கோபி செய்யலாமா'


PUBLISHED ON : செப் 29, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமச்சந்திரன், கோவை: என் வயது, 40. பிறப்பு முதலே இடுப்பு மூட்டுவிலகி இருந்ததால், என் கால் மூன்று அங்குலம் குறைவாக உள்ளது. சமீபகாலத்தில் இடுப்பு மூட்டில் தீவிர வலி உண்டாகி அவதிப்படுகிறேன். இதற்கு சிகிச்சை உள்ளதா?

நீங்கள் சொல்வது, ‘டிஸ்பிளாஸ்டிக் ஹிப்’ என்கிற நோய் ஆகும். குழந்தைப் பருவத்தில், இதற்கு முறையான சிகிச்சை எடுத்து இருந்தால், இப்போது வலியை தவிர்த்து இருக்கலாம். ‘டிஸ்பிளாஸ்டிக் ஹிப்’ உள்ளவர்களுக்கு இடுப்பு மூட்டின் வடிவம் மிகமோசமாக சீர்குலைந்து இருக்கும். அதை சரிசெய்ய, நவீன சிகிச்சை இடுப்பு மூட்டின் வடிவம் மாற்றும் மூட்டு மாற்று சிகிச்சை ஆகும்.

சாதாரணமாக செய்யப்படும் மூட்டு மாற்று சிகிச்சையைவிட, சற்று உயர்ந்த தொழில்நுட்பத்தில் துல்லியமாக செய்யப்படுவதால், கால் நீளத்தில் உள்ள பற்றாக்குறையும் சரியாகும். இயல்பான வாழ்க்கைக்கும் திரும்ப முடியும்.

ராஜேந்திரன், திருநெல்வேலி: என் வயது 74. தோள் மூட்டின் ‘பெரியார்த்ரைட்டிஸ்’ என்ற நோயால் அவதிப்படுகிறேன். இரவு நேரங்களில் தோள் மூட்டில் கடும் வலி உள்ளது. எனக்கு ஆரர்த்ரோஸ்கோபி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனக்கு இதய நோயும் உண்டு. இந்நிலையில் ஆர்த்ரோஸ்கோபி செய்யலாமா?

தோள் மூட்டைப் பொறுத்தவரை, நீங்கள் சொல்லும் நோய்க்கு, ஆர்த்ரோஸ்கோபி மூலம், நிரந்தர தீர்வு காண முடியும். இதயத்தின் செயல்பாடு குறைவாக இருப்பதற்கும், தோள் மூட்டில், ஆர்த்ரோஸ்கோபி செய்வதற்கும் நேரடி தொடர்பு இல்லை.

ஆனால், மயக்க மருந்து கொடுப்பதற்கு இடையூறாக இருக்கலாம். இந்த காரணத்தை மனதில் இருத்தி, இதய நோயின் செயல்பாடு குறைவாக உள்ளவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமலேயே, ‘நெர்வ் பிளாக்’ என்கிற முறையில் ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சை அளிக்க முடியும். பூரணமாக குணமடையவும் முடியும்.

டேவிட், தேனி: டூவீலரில் சென்ற எனது மனைவி, கீழே விழுந்ததில், இடது முழங்கால் மூட்டில் காயம் ஏற்பட்டு, மூட்டு கடுமையாக வீங்கியது. டாக்டரிடம் காண்பித்ததில், முழங்கால் மூட்டினில் உள்ள மூன்று இணைப்பு நார்கள் அறுந்து, மூட்டு விலகி இருப்பதாக கூறினார். இதற்கு சிகிச்சை உள்ளதா?

முழங்கால் மூட்டில் நான்கு முக்கிய இணைப்பு நார்கள் உள்ளன. இரண்டு நார்களுக்கு மேல் அறுந்தால், மூட்டு விலகிய நிலைக்கு சென்றுவிடும். முழங்கால் மூட்டை பொறுத்தவரை, இது, மிக மோசமான காயமாகும். மூட்டு, நிலையற்ற தன்மைக்கு சென்று விடும். முதலுதவியாக, ‘நீ மூவ்மென்ட் பிரேஸ்’ அணிய வேண்டும். முழங்கால் மூட்டில் அசைவு கிடைத்த பின், கூடிய விரைவில் அறுந்த இணைப்பு நார்கள், சீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் பூரணமாக குணமடையலாம். இவை அனைத்தும் ஆர்த்ரோஸ்கோபி மூலமே செய்ய முடியும். திறந்தவெளி சிகிச்சையைவிட, ஆர்த்ரோஸ்கோபி மூலம் செய்தால் வெற்றி விகிதம் மிகஅதிகம்.

டாக்டர் சுப்ரமணியன்,

மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us