sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/உயரம் குறைந்த பற்களுக்கு கேப் பொருத்த முடியுமா?

உயரம் குறைந்த பற்களுக்கு கேப் பொருத்த முடியுமா?

உயரம் குறைந்த பற்களுக்கு கேப் பொருத்த முடியுமா?


PUBLISHED ON : அக் 07, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் பற்களின் இடையே உணவு மாட்டிக் கொள்கிறது. அந்த இடத்தில் ஈறுகளின் வீக்கம் வலி வருகிறது. பல் குச்சி, பின் கொண்டு உணவுத் துகள்களை அகற்றுகிறேன் சரியா

பற்களுக்கு இடையே இயற்கையாகவே இடைவெளிகள் இருக்கும். ஆனால் சில நேரங்களில் பல் வரிசை சீராக இல்லையென்றாலோ, பக்கத்துக்கு பற்களின் அமைப்பினாலோ இவ்விடைவெளி அதிகமாகும். அப்போது உணவு அந்த இடத்தில் மாட்டிக் கொள்ளும். இதனால் கிருமிகள் சேர்ந்து ஈறுகளில் வலி, வீக்கம் ஏற்படும். பல் குச்சி, பின் பயன்படுத்துவதால் இடைவெளி அதிகமாகும். இதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் டென்டல் பிளாஸ் பயன்படுத்தலாம். இது நூல் போன்று இருக்கும். இந்த இடைவெளிக்கு பிரத்தியேக பிரஷ்களும் உள்ளன. இதை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். இதிலும் சரியாகவில்லை என்றால், இடைவெளிக்கு பக்கத்தில் உள்ள பல்லை அடைக்கலாம், கேப் போடலாம்.

பல் சொத்தையை கவனிக்காமல் விட்டதால் ஈறு வரை உடைந்துவிட்டது. பல்லின் உயரம் குறைந்து விட்டது. இந்த பல்லை எடுக்காமல் கேப் பொருத்தலாமா?

ஒரு பல்லில் கேப் போடுவதற்கு குறிப்பிட்ட அளவு உயரம் வேண்டும். இது குறையும் போது கேப் கழன்று விழ வாய்ப்பு உண்டு. ஆனால், எல்லா பற்களிலும் ஒரே அளவு உயரம் இருக்காது. சொத்தை வந்தோ அல்லது பல் உடைந்தாலோ பல்லின் உயரம் மிகவும் குறைந்து விடும். இது போன்ற பற்களில் கேப் பொருத்தும் போது ஈறுகளுக்கு அடியில் வரை கேப் இருக்கும். இதனால் அங்கு கிருமி சேர்ந்து ஈறு மற்றும் எலும்பு நோய் வரும். இந்நிலையில் தவிர்ப்பதற்கு கேப் போடுவதற்கு முன் கிரெளன் லென்தனிங் அதாவது பற்களை நீளப்படுத்தும் சிகிச்சை செய்தால் உயரம் கம்மியாக பற்களில் கூட கேப் போடலாம். இந்த சிகிச்சை முறையில் பற்களை சுற்றியுள்ள ஈறுகளை சற்று கீழே இறக்கி பல்லின் உயரம் கூட்டப்படும். இதனை லேசர் கருவி மூலம் வலி, கூச்சம், தழும்பு இல்லாமல் செய்யலாம்.

எனக்கு இம்ப்ளான்ட் வைத்து பல் கட்ட வேண்டும். ஒரே நாளில் இம்ப்ளான்ட் செய்யலாமா?

பல் எடுத்த இடத்தில் முடிந்த அளவு சீக்கிரமாக பல் கட்டுவது நல்லது. நேரம் இல்லாதோருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது டென்டல் இம்ப்ளான்ட் சிகிச்சையில் பல் இல்லாத இடத்தில் நிலையான பல் கட்ட இரண்டு வழிகள் உண்டு.

அருகில் உள்ள பற்களோடு சேர்த்து இல்லாத பல்லை கட்டுவது. மற்றொன்று பல் இல்லாத இடத்தில் இம்ப்ளான்ட்டை வைத்து அதன் மீது பற்களை பொருத்துவது. சில ஆண்டுகளுக்கு முன் இம்ப்ளான்ட் வைத்து 4 - 6 மாதம் கழித்து தான் பல் கட்ட முடியும். ஆனால், இன்றைய புதிய வகை இம்ப்ளான்ட்கள், நவீன சிகிச்சை முறைகள் மற்றும் பல் கட்ட பயன்படுத்தும் சாதனங்களால் இம்பிளான்ட் வைத்த அடுத்த நாளே பல் கட்டலாம்.

- டாக்டர் ஜெ. கண்ணபெருமாள்,

பல்சிகிச்சை நிபுணர், மதுரை.

94441 54551


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us