sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

அதிக சூடான உணவு சாப்பிடலாமா?

/

அதிக சூடான உணவு சாப்பிடலாமா?

அதிக சூடான உணவு சாப்பிடலாமா?

அதிக சூடான உணவு சாப்பிடலாமா?


PUBLISHED ON : அக் 07, 2012

Google News

PUBLISHED ON : அக் 07, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உணவை, எப்போதாவது சுடச்சுட சாப்பிடலாம். ஆனால், தினமும் சுடச்சுட சாப்பிட்டால் உணவுக் குழாயில் புண் ஏற்பட்டு, அது பின்னால் புற்றுநோயாக மாறக்கூடும்.

நான், ஒரு ஊறுகாய் விரும்பி. ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா?


அரவிந்த், திண்டுக்கல்

ஊறுகாய் என்றாலே, அதை சாப்பாட்டில் தொட்டுக் கொள்ளத்தான் உபயோகப்படுத்த வேண்டுமே தவிர, அதிகமாக உண்ணக் கூடாது. அவ்வாறு உண்பதால், வயிற்றில் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், வீட்டு ஊறுகாய் தவிர, கடையில் விற்கும் ஊறுகாயில் அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் வயிற்றில் புற்றுநோய் உண்டாக்கக் கூடியவை. ஆகவே, ஊறுகாய் சாப்பிடுவோர், கடையில் ஊறுகாய் வாங்குவதை தவிர்த்துவிட்டு, வீட்டு ஊறுகாயையே உபயோகப்படுத்த வேண்டும்.

நான் காரம் அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றில் புற்றுநோய் ஏற்படுமா?

ஹரிகரன், காரைக்குடி

காரம் அதிகம் சாப்பிடுவதால், வயிற்றுக்குள் இரைப்பை மற்றும் சிறுகுடலில் புண் ஏற்படலாம். சிறுகுடலில் ஏற்படும் புண் புற்றுநோயாக மாறாது. ஆனால், இரைப்பைப் புண் புற்றுநோயாக மாற வாய்ப்புகள் உள்ளன.

நான், ஒரு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக பணி செய்கிறேன். எனக்கு அடிக்கடி சோர்வு ஏற்பட்டு, டாக்டரிடம் பரிசோதனை செய்ததில், ரத்தசோகை என்று கூறுகிறார். அது புற்றுநோயாக இருக்குமா? மா.கோபாலன், சிவகாசி

ஆண்களுக்கு ரத்தசோகை சாதாரணமாக ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டால் அது பல நோய்களால் ஏற்படக்கூடும். அதில் ரத்தம், பெருங்குடல் மற்றும் சிறுநீரகம் போன்றவை உள்ளடங்கும். ஆகவே நீங்கள், உங்கள் உடல்நிலையை முழுமையாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

எனக்கு அடிக்கடி, கால் பெருவிரலில் நகம் உள்கூடி வளர்ந்து கால் புண்ணாகி விடுகிறது. அந்த இடத்தில் புற்றுநோய் வரவாய்ப்பு உள்ளதா? சரண்யா, அம்பாசமுத்திரம்

பெருவிரலில் உள்நகம் வளர்வதற்கு Ingrowing toe nail என்று பெயர். அப்படி வளர்ந்த நகத்தின் பகுதியையோ, அல்லது நகம் முழுவதுமாக எடுத்தால் குணப்படுத்திவிடலாம். இதற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இல்லை.

என், 3 வயது குழந்தைக்கு, சில நாட்களாக கண்ணின் கருவிழியில் வெள்ளையாக தென்படுகிறது. இது ஏதேனும் புற்றுநோயாக இருக்குமா? மணிமேகலை, சிவகாசி

நீங்கள் சொல்லும் நோய்க்கு White Eye reflex என்று பெயர். இது கண்ணில் ஏற்படும், 'ரெடினோ பிளாஸ்டோமா' என்ற புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், இது பரம்பரையாக ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே நீங்கள் உடனடியாக, டாக்டரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது.

புற்றுநோய் குறிப்பாக, கருப்பை வாய் புற்றுநோயை மின்சாரத்தால் குணப்படுத்த முடியும் என்கிறார்களே, அது உண்மையா?

லாரன்ஸ், மேல்மருவத்தூர்


புற்றுநோயை குணப்படுத்த பல சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் கதிரியக்க சிகிச்சையும் ஒன்று. கதிரியக்க சிகிச்சை என்பது, மின்காந்த அலைகளினால் கொடுக்கப்படும் ஒரு சிகிச்சை ஆகும். அதை பேச்சுவழக்கில், 'கரன்ட்' வைப்பது என்கின்றனர். மற்றபடி மின்சாரத்திற்கும், புற்றுநோய் சிகிச்சைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.

நான் ஒரு சமையல்காரன். சமையல் முடிந்தவுடன் உணவுப் பண்டங்களை சுடச்சுட சுவை பார்ப்பது என் பழக்கம். எனக்கு புற்றுநோய் வருமா? முருகன், மதுரை



பொருட்களை எப்போதாவது சுடச்சுட சாப்பிடலாம். ஆனால் தினமும், சுடச்சுட சாப்பிட்டால் உணவுக் குழாயில் புண் ஏற்பட்டு, அது பின்னால் புற்றுநோயாக மாறக்கூடும். நான், 30 வயது நிரம்பிய சலவைத் தொழிலாளி.

எனது இரண்டு ஆண் விரைகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நீக்கப்பட்டுவிட்டன. எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா? ஆண்டிச்சாமி, திண்டுக்கல்

ஆண் விரைகளில் இரண்டில் ஒன்று இருந்தால்கூட, குழந்தை கிட்டும். ஆனால், இரண்டுமே இல்லாத நிலையில், செயற்கை கருத்தரித்தல் மூலம்தான் குழந்தை பெற முடியும்.

என் வயது 28. என் மார்பகத்தில், அதிக வலி ஏற்படுகிறது. இதனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? ரேகா, மதுரை

மார்பகத்தில் வலி ஏற்படுவதற்கு, Fibroadenosis எனப்பெயர். இதை மருந்து மாத்திரைகளால் குணப்படுத்தி விடலாம். மார்பகத்தில் வலி ஏற்படுவதற்கும், புற்றுநோய் வருவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே, இதை நினைத்து நீங்கள் கவலைப்படவும் தேவையில்லை.

டாக்டர் மோகன் பிரசாத்,

)98430-50822






      Dinamalar
      Follow us