தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சர்க்கரை கோளாறுக்கு யோகா தெரபி பலன் தருமா?

சர்க்கரை கோளாறுக்கு யோகா தெரபி பலன் தருமா?

சர்க்கரை கோளாறுக்கு யோகா தெரபி பலன் தருமா?


PUBLISHED ON : டிச 28, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யோகா செய்வதால் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. கணையத்தின் செயல்பாடு அதிகரிக்கிறது. இதனால் இன்சுலின் சுரப்பு துாண்டப்படுகிறது; செரிமானம் மேம்படுகிறது. தொடர்ந்து யோகா பயிற்சிகள் செய்தால், மனம் ஒருமுகப்பட்டு, கவனம் சிதையாமல் இருக்கும். இதனால், உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடிகிறது.

பெரும்பாலான யோகா பயிற்சிகள், ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகின்றன. தேவைக்கு ஏற்ப சீராக வளையும் தன்மையுடன் உடலை வைத்திருக்க யோகா உதவுகிறது. ரத்த நாளங்களை, 'எலாஸ்டிக்' போல வைத்திருக்கும். யோகாவில் உள்ள ரிலாக்சேஷன் நுட்பங்கள், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.

ஜீரண மண்டலம், நாளமில்லா சுரப்பிகள், இனப்பெருக்க உறுப்புகளுக்கு நேர்மறையான அதிர்வை தருகிறது. மொத்தத்தில், தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதால், நேர்மறையான எண்ணமும், தன்னம்பிக்கையும் வருகிறது.

டாக்டர் சுபா ரவி,

யோகா மற்றும் உணவு ஆலோசகர்,

சஞ்சீவனம் சிகிச்சை மையம்,

சென்னை.

91766 02599

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us