sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

"கூலிங் கிளாஸ்' வாங்குவதில் கவனம் தேவை!

/

"கூலிங் கிளாஸ்' வாங்குவதில் கவனம் தேவை!

"கூலிங் கிளாஸ்' வாங்குவதில் கவனம் தேவை!

"கூலிங் கிளாஸ்' வாங்குவதில் கவனம் தேவை!


PUBLISHED ON : மார் 10, 2013

Google News

PUBLISHED ON : மார் 10, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெயிலில் வெளியில் போகும் போதும், இருசக்கர வாகனங்களை ஓட்டும்போதும், 'கூலிங் கிளாஸ்' அணியும் பழக்கம் உள்ளவர்கள், மருத்துவரின் ஒப்புதல் பெற்று, அவற்றை அணிந்தால் நல்லது.

'எண் சாண் உடம்பிற்கு, சிரசே பிரதானம்' என்றால், 'சிரசிற்கு கண்களே பிரதானம்' என, சொல்லலாம். உடல் உறுப்புகளில் மிகவும் நுட்பமான அமைப்பை பெற்றுள்ள, கண்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்குகிறார், சென்னை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் திரிவேணி வெங்கடேஷ்.

1. இளம் வயதினருக்கு, கண்களுக்கு கீழ், கரு வளையங்கள் வர என்ன காரணம்?

வயோதிகம் காரணமாக, 40 வயதை கடந்தோருக்கு தோலில் ஏற்படும் மாற்றத்தால், கண்களுக்கு கீழ் கரு வளையங்கள் ஏற்படுவது இயற்கை. மருத்துவரின் ஆலோசனைப்படி, சந்தையில் கிடக்கும் பிரத்யேக, 'கிரீம்'களை பயன்படுத்துவதன் மூலம், இதை கட்டுப்படுத்தலாம். இளம் வயதினருக்கு கரு வளையம் வருவதற்கு, போதிய ஓய்வின்மை தான் முக்கிய காரணம். இரவு நேரத்தில் சரியான தூக்கம், தினமும் நிறைய தண்ணீர் குடிப்பது, உணவில், பழங்கள், பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொண்டால், கரு வளையம் வராமல் தடுக்கலாம்.

2. நீரிழிவு நோய் உள்ளோர், கண்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

நீரிழிவு நோயாளிகளின் கண்களுக்கு செல்லும், மெல்லிய ரத்த குழாய்களில் ஏற்படும் வீக்கத்தால், விழித்திரை பாதிக்கப்படலாம்.

ஆண்டுக்கணக்கில் நீரிழிவு நோய் உள்ளோருக்கு, மற்றவரை விட, கண்புரை, விழித்திரை பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம். இவற்றுக்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாது என்பதால், நீரிழிவு நோயாளிகள், மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

3. குறை பிரசவ குழந்தைகளுக்கு, எதிர் காலத்தில் பார்வை கோளாறு ஏற்படுமா?

பல்வேறு மருத்துவ காரணங்களுக்காக, நாட்கணக்கில் செயற்கை சுவாசத்திற்கு உட்படுத்தப்படும் குறைபிரசவ குழந்தைகளுக்கு, கண்களுக்கு செல்லும் ரத்த குழாய்களில், ரத்த வினியோகம் தடைபட்டு அவை செயலிழக்கும் அபாயம் உள்ளது.

இந்த பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளின் கண்களில், கட்டுப்பாடின்றி, புதிய ரத்த குழாய்கள் உருவாகும். இவற்றால், விழித்திரை பாதிக்கப்பட்டு, பார்வை வராமல் போக வாய்ப்புள்ளது. தேவையற்ற ரத்த குழாய்களை, ஆரம்ப நிலையிலேயே அழிக்க, குழந்தைகள் பிறந்த சில மாதங்களிலேயே, 'லேசர்' அறுவை சிகிச்சை செய்யப் படும். எனவே, குறை பிரசவ குழந்தைகளுக்கு, கண் பரிசோதனை செய்வது அவசியம்.

4. கணினி முன் அமர்ந்து பணிபுரிவோருக்கு ஏற்படும் கண் பாதிப்புகளை தவிர்ப்பது எப்படி?

பல மணி நேரம், கணினி முன் அமர்ந்து பணிபுரிவோரில் பெரும்பாலோருக்கு, கண் சோர்வும், சிலருக்கு தலைவலியும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கணினியில், மணிக்கணக்கில் பணிபுரிவோர், அவ்வப்போது, கண்களை, 15 முதல் 20 முறை, இமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதனால், கண்களில் இயற்கையாக சுரக்கும் நீர் மூலம், கண்களுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் கிடைத்து, அவை சோர்வடையாமல், எப்போதும் ஒளிப்படைத்ததாக இருக்கும்.

தலைவலி ஏற்படுவதை தவிர்க்க, 20 நிமிடத்திற்கு ஒருமுறை, 20 அடி தொலைவில் உள்ள பொருளை, 20 நொடிகள் பார்ப்பதை, கணினியில் பணிபுரிவோர் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி, கணினியில் பணிபுரியும்போது, ஏ.ஆர்.சி., தொழிற்நுட்பத்துடன் கூடிய கண்ணாடிகளை அணிந்தால், கண் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

5. பள்ளிப் பருவத்திலேயே, கண்ணாடி அணியும் குழந்தைகளின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக தெரிகிறதே?

மனிதர்களுக்கு, 18 வயது வரை, மற்ற உறுப்புகளை போல, கண்களும் வளர்கின்றன. முழுவதும் வளர்ந்த நிலையில், நம் கண்களின் (ஞுதூஞு ஞச்டூடூ) நீளம், 24 மி.மீ., இருக்க வேண்டும். இந்த அளவு, சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும் குழந்தைகளுக்கு, பார்வை குறைபாடு ஏற்படுகிறது. மேலும், கருவிழி அமைப்பும், பார்வை திறனை தீர்மானிக்கிறது. இயற்கையான இக்குறைபாட்டிற்கு, குறிப்பிட்ட காரணங்கள் இல்லை. போதிய வெளிச்சம் மற்றும் குறைந்தபட்சம், 6 அடி தூரத்தில், 'டிவி' பார்ப்பது குழந்தைகள், பெரியவர்களின் கண்களுக்கு நல்லது.

6. சந்தையில் கிடைக்கும், 'கூலிங் கிளாஸ்'களை அணிவதால் கண்களுக்கு பாதிப்பா?

சூரியனில் இருந்து வரும், புற ஊதா கதிர்களை கட்டுப்படுத்தி, கண்களுக்குள் அனுப்பும், தொழிற்நுட்பத்துடன் கூடிய, 'கூலிங் கிளாஸ்'களை அணிவதால், கண்களுக்கு பாதிப்பில்லை. இத்தொழிற்நுட்பம் இல்லாத, 'கூலிங் கிளாஸ்'களை அணிந்தால், கண்களுக்கு இயற்கையாக உள்ள, புறஊதா கதிர்களை கட்டுப்படுத்தும் திறன் பாதிக்கப்படும். வெயிலில் வெளியில் போகும் போதும், இருசக்கர வாகனங்களை ஓட்டும்போதும், 'கூலிங் கிளாஸ்' அணியும் பழக்கம் உள்ளவர்கள், மருத்துவரின் ஒப்புதல் பெற்று, அவற்றை அணிந்தால் நல்லது.

கண் மருத்துவ நிபுணர் திரிவேணி வெங்கடேஷ்,

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை

94443 91767






      Dinamalar
      Follow us