தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சர்க்கரை நோய் தேவை அக்கறை!

சர்க்கரை நோய் தேவை அக்கறை!

சர்க்கரை நோய் தேவை அக்கறை!


PUBLISHED ON : நவ 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பின், குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது.

உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும், இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமானது. போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான், ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்: அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசித்தல், தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, எப்போதும் களைப்பாக இருத்தல், ஆறாத புண், பிறப்புறுப்பில் நோய் தொற்று, காரணமில்லாமல் எடை குறைதல், மிகக் கூடுதல் எடை, கால் மரத்துப் போய் உறுத்துதல், மங்கலான பார்வை, இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே மருத்துவரை அணுகி பரிசோதிக்கலாம்.

விளைவுகள்: நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும்.

கட்டுக்குள் இல்லாத நீரிழிவு, பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக, பார்வையை இழக்க நேரிடலாம்

அல்லது பார்வை மங்கலாம். சிறுநீரகங்கள் சேதமடையும். நோய்த்தொற்று ஏற்படும். காங்க்ரீன் எனும் புண், பாதத்தில் பிரச்னைகள் வரலாம். மூளைச்சேதமும்,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

நோயைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோயின் சிகிச்சையில், உணவுமுறை, உடற்பயிற்சி, நோயின் தீவிரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மருந்து உட்கொள்ளுதல், இன்சுலின் பயன்படுத்துதல் உள்ளிட்டவை அடங்கும். இந்த சிகிச்சைகளைத் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

சர்க்கரை நோயாளிகளின் உணவு முறை: சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி, அரிசி, கேழ்வரகு போன்ற கார்போஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடுங்கள். குறைந்தளவு மற்றும் நேரம் தவறாமல் சாப்பிடவும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.

வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள். சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி: நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது. உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.



இன்சுலின்
: பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்து விட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ளத் தொடங்குவது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us