
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்முறை
1. விரிப்பில் நேராக நின்று, இரண்டு கால்களுக்கு இடையே, 3 அடி இடைவெளி இருக்குமாறு கால்களை விலக்கி நிற்க வேண்டும்.
2. மூச்சை இழுத்துக்கொண்டே கைகளை பக்கவாட்டில் நேராக நீட்டி, வலது காலை வலது பக்கம் வைக்க வேண்டும்.
3. மெதுவாக மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, வலது காலை மடக்கி, பின்பு வலது புறம் சாய்ந்து, வலது கையை வலது கால்
விரலுக்கு சற்று முன்புறம் வைக்க வேண்டும்.
4. இடது கையை இடது தொடையின் மீது முழங்கை மடங்காமல் வைக்க வேண்டும்.
5. இப்போது மூச்சை இழுத்துக் கொண்டே இடது காலை உயர்த்தும் அதே நேரத்தில், வலது காலையும் நேராக வைக்க வேண்டும்.
6. முகத்தை மேல்நோக்கி திருப்ப வேண்டும். இடது கால் மடங்க கூடாது.
7. சிறிது நேரம் ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், சாதாரண நிலைக்கு வரவேண்டும். பிறகு கால்களை மாற்றி செய்ய வேண்டும்.
கால அளவு
ஒவ்வொரு பக்கமும், மூன்று முறை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும், 20 முதல், 30 வினாடிகள் வரை முயற்சிக்கலாம்.
குறிப்பு முட்டி பகுதியில் சவ்வு கிழிந்தவர்கள், இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.பயன்கள்
1. வாயு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும்
2. கால்களுக்கு செல்லும் நரம்புகள் ரத்த ஓட்டம் பெற்று ஊட்டம் பெறும்
3. அடி முதுகு நன்கு வலுவடையும்
4. நெஞ்சுப்பகுதி நன்கு விரிவடைந்து, சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து காக்கும்.
- ரா.சுதாகர், திருமூலர்
பிரபஞ்ச யோகா மையம், சென்னை. 97909 11053

