தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஊட்டச்சத்து குறைபாடால் பிறவி குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடால் பிறவி குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடால் பிறவி குறைபாடு


PUBLISHED ON : நவ 18, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிறவி குறைபாட்டு நோய்களை எப்படி அறிவது?

கருவிலிருக்கும் போது உறுப்புகள் முழு வளர்ச்சியடையாமல் இருத்தல், பிறக்கும் போது குழந்தையின் உடல் கட்டமைப்பில் குறைவு போன்றவைதான் பிறவி குறைபாட்டு நோய். பிறந்த சில நாட்களுக்கு பிறகுகூட உறுப்புகளில் குறைபாடு ஏற்படலாம். அதாவது கண் தெரியாமல், காது கேட்காமல் போகலாம். இருதய குறைபாடுகளும் வரலாம். அதுவும் பிறவி குறைபாட்டு நோய்தான். ஐம்பது சதவீத பிறவி குறைபாடுகளுக்கு நிச்சயமான ஒரு காரணத்தை கூற முடியாது. தாயிடம் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு, பிறவி குறைபாட்டை உருவாக்கும் ரசாயனங்களின் தாக்கம் அதிகம் உள்ள உணவுமுறை போன்றவையும் நோய் வர முக்கிய காரணங்கள்.

தாய்க்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால்?

கர்ப்ப காலத்தில் இரும்பு, அயோடின், போலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் தாயின் உடலில் குறைந்தாலும் பிறவி குறைபாட்டு குழந்தைகள் பிறக்கலாம். 'மெனிங்கோமைலோசில்' என்ற நரம்பு மண்டல பாதிப்பால் கூட இக்குறைபாடு ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் அதிக வீரியமுள்ள மாத்திரைகளை உட்கொள்ளுதல், கர்ப்பத்தின் போது கதிரியக்க தாக்கம் போன்ற காரணங்களாலும் பிறவி குறைபாடுகள் உருவாகலாம்.

உறவுமுறை திருமணங்களால் ஏற்படுவதுண்டா?

ரத்த உறவு முறைக்குள் நடக்கும் திருமணங்களால் குரோமோசோம்களில் குறைபாடு ஏற்பட்டு குழந்தைகளுக்கு சிலவகை பரம்பரை குறைபாட்டு நோய்கள் ஏற்படலாம். ரத்த உறவு முறை திருமணங்களை தவிர்த்தலும், வயது அதிகமான பெண்கள் கர்ப்பமாதலை தவிர்த்தலும் நல்லது.

எவ்வாறு கண்டறியலாம்?

கர்ப்பமாவதற்கு முன்னர் ஒரு குடும்பத்தில் வேறு யாரும் பாதிக்கப்பட்டிருப்பின் பெற்றோருடைய ரத்தத்தை சோதித்து பிறக்க போகும் குழந்தைக்கு அவ்வாறான குறைபாடுகள் ஏற்படுமா என கண்டறியலாம். கர்ப்ப காலத்தில் பிறவி குறைபாடுகள் ஏற்படக்கூடிய காரணிகள் காணப்பட்டால் தாயின் ரத்தத்தையோ, நச்சுக்கொடியின் துண்டையோ, கர்ப்பபையிலுள்ள, 'அம்னியோடிக்' திரவத்தையோ சோதிப்பது, கர்ப்பத்தை, 'ஸ்கேன்' செய்வதன் மூலமும் பல பிறவி குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறியலாம்.

சிகிச்சைகள் என்ன?

இன்றைய நவீன மருத்துவ வசதிகள் மூலம் பலவகையான பிறவி குறைபாட்டு நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும். உதாரணமாக அங்க சீரமைப்பு சிகிச்சைகள், இதய சிகிச்சைகள், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை போன்ற நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் குழந்தைக்கு பாதிப்புகள் வரும் முன் உரிய சிகிச்சைகளை வழங்க முடியும்.

டாக்டர். ந.அரவிந்த் பாபு

குழந்தைகள் நல நிபுணர், விருதுநகர்.

98422 61613

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us