
* உடல் எடையைக் குறைக்க அல்லது கட்டுக்குள் வைக்க, ஜிம்முக்கு சென்று கடினமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை; சைக்கிளிங் செய்தாலே எடையைக் குறைக்க முடியும்
* சைக்கிளிங் செய்வதற்கு, எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. சாதாரணமாகவே ஓட்டலாம்
* மூட்டு வலிக்கு முக்கிய காரணமே, உடற்பயிற்சியின்மை தான். மூட்டு வலியை தவிர்க்க, சைக்கிளிங் சிறந்த வழி. மூட்டு வலி இருப்பவர்கள், எளிதாக சைக்கிளிங் செய்ய முடியும்
* சைக்கிளிங் செய்வது, 'ஆஸ்டியோபொரோசிஸ், ஆர்த்ரைடிஸ்' போன்ற மூட்டுப் பிரச்னைகளிலிருந்து காப்பாற்றும்; தொடைகள் வலுவாகும்
* தவறான வாழ்வியல் முறையால், 'டைப் - ௨' வகை சர்க்கரை நோய் பெரும்பாலும் வருகிறது. எனவே, சைக்கிளிங் செய்வதால், கெட்ட கொழுப்புகள் கரையும். சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்
* சைக்கிளிங்கின் போது, நுரையீரலின் செயல்பாடுகள் சீராகும். இதய வால்வுகளில் கொழுப்பு படிவது தடுக்கப்படும்.
கொழுப்பு குறைவதால், மாரடைப்பு முதலான இதய நோய்கள், ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவை தடுக்கப்படுகின்றன
* காலையில் எழுந்து சைக்கிளிங் செய்வதால், மனம் ஒரு நிலை அடைவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
கோ.கார்த்திகேயன், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.

