
நம்முடைய  மூளையின் மனதின் சிந்தனைகளை, எண்ணங்களை  நாம் வார்த்தைகளால்  சொல்கிறோம்.. எழுத்துக்களால் எழுதுகிறோம்.. ஆனால் நம் உடம்போ  தன்னுடைய மொழியில் உடம்பில் இருக்கும் அனைத்து உறுப்புகளாலும் பேசுகிறது... தமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை தன மீதே  அறிகுறிகளாக  எழுதுகிறது... கல்லீரலில் ஒரு பிரச்னை  இருக்கிறது... சிறுநீரகத்தில் ஒரு பிரச்னை  இருக்கிறது... இதயத்தில்  ஒரு பிரச்னை இருக்கிறது.. என்பது போன்ற விஷயங்களை  உடல் தனக்கு தெரிந்த மொழியில் அறிகுறிகளாக  நமக்கு சொல்கிறது... அது காய்ச்சலாகவோ, தலைவலியாகவோ, கால்வலியாகவோ, கண்நகம் போன்றவற்றின் வற்றின் நிற மாற்றமாகவோ, ஏதேனும் ஒரு இடத்தில் வீக்கமாகவோ  இருக்கலாம்... 
உடம்பில் இருக்கும்  உறுப்புகள்  பாதிப்புக்கு ஏற்ப ஒவ்வொரு  அறிகுறியை கொடுக்கும்... ஆனால் அதை எல்லாம் கவனிக்க நமக்கு ஏது  நேரம்... நமக்குத்தான் உடனடியாக ரிசல்ட் வேண்டுமே...  ஆகவே தான் கடைகளுக்கு ஓடிச்சென்று  அனாசினோ நோவால்ஜின்னோ  வாங்கி சாப்பிட்டு அந்த அறிகுறிகளை மறைத்துவிட்டு  மறுபடியும்  ஓடத்தொடங்கி  விடுகிறோம்.... நமது உடம்போ.. இப்படி சமிக்கை மொழியில்  கதறி கதறி  நாம் கண்டுகொள்ளாமல் போக... சம்மந்தப்பட்ட  பாதிக்கப்பட்ட  உறுப்பு  வேறு  வழியின்றி   வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கும்.... அப்புறம் தான் நமக்கு அது உறைக்கும்.... உடனே  ஒரு பெரிய மருத்துவமனையை  நோக்கி  ஓடுவோம்... அங்கே  மருத்துவர் இரத்த பரிசோதனை, சிறுநீர்மல  பரிசோதனை, எக்ஸ்ரே, ஈ.ஜி.சி, ஸ்கேன் இன்னும் என்னெல்லாம் இயந்திரங்கள் வாங்கி  வைத்திருக்கிறார்களோ... அத்தனைக்கும் நம்மை வைத்து வேலை கொடுத்து விடு கடைசியாக  சிறுநீரகங்கள்  கெட்டுப்போய் விட்டது  என்றோ... ரத்தக்குழாயில் அடைப்பு  இருக்கிறது என்றோ ஒரு குண்டை  தூக்கி நம் தலையில் வீசுவார்கள்...
அப்புறம் சேமிப்பை எல்லாம் கரைத்து மருந்துகளுக்கும் மருத்துவர்களுக்கும்  கொடுத்து விட்டு உயிருடன் நடைபினமாகவோ உயிரற்ற முழு பிணமாகவோ தான் நாம் வெளியேற வேண்டும்...
இதற்கெல்லாம்  யார் காரணம்...? வேறு யாரையும் குறை சொல்லவே முடியாது.. முழுக்க முழுக்க நாம் மட்டும் தான் காரணம்.. நம்முடைய “அவசர” புத்தி காரணம்.. நம்முடைய  அறியாமை காரணம். நம்முடைய விளம்பர மோகம்  காரணம்.. நம்முடைய முன்னோர்களை நாம் புறக்கணித்தது காரணம்.. அவர்களின் வாழ்க்கையை  நான் ஏளனமாய் நினைத்தது காரணம்...
சரி.. என்னவோ  நடந்தது நடந்துவிட்டது... இதிலிருந்து மீள  என்ன வழி...?? முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை உணவு முறைக்கு மாறிவிட்டால்  போதுமா?
நம் முன்னோர்கள்  பயன்படுத்திய இயற்கை உணவு முறைகளுக்கு  மாறினால்  நாம் தொலைத்த  ஆரோக்கியம்  திரும்ப வந்துவிடுமா... என்றால்... நிச்சயம் முழுக்க வரவே வராது...  பாதியளவு  வேண்டுமானால்  ஆரோக்கியம் வரலாம்... அப்படியானால்  மீதி  ஆரோக்கியம்??
நம்  முன்னோர்கள்  கம்பு, கேழ்வரகு, சாமை, திணை,குதிரைவாலி போன்ற சிரறுதானியங்களை அதிக அளவில் உட்கொண்டார்கள்.... அதில் கிடைத்த சக்தியால் நாள் முழுதும் உழைத்தார்கள்.. அதனால் உடலில் சேர்ந்த சக்தி (கலோரீஸ்) எரிக்கப்பட்டது... உடல் ஆரோக்கியமாய்  திகழ்ந்தது.... ஆரோக்கியமான உடலை தொட்டுப்பார்க்கவே நோய்கள்  அஞ்சியது... அதே உணவை நாம் உட்கொண்டால் என்னாகும்?
அவர்கள் வாழ்ந்த காலகட்டத்திற்கு அது சரி...  ஏனென்றால் அன்று  சொல்போன்  இல்லை.. கம்ப்யூட்டர்  இல்லை... டெலிவிஷன் இல்லை ரேடியேஷன் இல்லை.. போல்யூஷனும்  இல்லை.. ஆனால் நம்முடைய காலகட்டத்திலோ இவைகள் எல்லாம் இருக்கிறது.. ஆரோக்கியமும் நிம்மதியும்  இல்லை... என்னதான் நம் முன்னோர்கள்  பின்பற்றிய உணவு முறைகளை  இன்று  நாம் பின்பற்றினாலும் அவர்களை போல  உழைக்க நாம் தயாராக இல்லை... அல்லது உழைக்கும் தேவை  இருக்கவில்லை.... ஆகவே அந்த உணவுகளை உட்கொண்டு உடலால் உழைக்காமலேயே இருந்தாலும்  அந்த சக்தி சேமிக்கப்படும்... அது நாளடைவில் நோயாக  மாற்றமடையும்... கூடவே நாம் இன்று உபயோகிக்கும்  மின்னணுக்கருவிகளின்  கதிர் வீச்சும், மாசுபட்ட காற்றும் நிச்சயம் நோயை கொண்டுவரவே செய்யும்..
ஈஸ்வரி 
பீனிக்ஸ் ஹெல்த் கேர்,
அக்குபஞ்சர் மற்றும் உணவு மருத்துவம், 
92/10, நூறடி சாலை,
வடபழனி, சென்னை.
9940175326

