sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/எலும்புகளை வலுவாக்கும் 'சைக்கிளிங்!'

எலும்புகளை வலுவாக்கும் 'சைக்கிளிங்!'

எலும்புகளை வலுவாக்கும் 'சைக்கிளிங்!'


PUBLISHED ON : நவ 06, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எலும்புகளின் அடர்த்தி 35 வயதுக்கு மேல் குறைய ஆரம்பிக்கும். 30 வயது வரை எலும்புகளின் வளர்ச்சி இருக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, முழு வளர்ச்சியுடன் இருக்கும். 35 வயதிற்கு மேல், எலும்புகளில் வளர்ச்சி இருக்காது; வலிமை குறையத் துவங்கும்.

கால்சியம் உற்பத்தியை துாண்டுவதில், 'ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் சுரக்கும், 'ஈஸ்ட்ரோஜென்' மாதவிடாய் நிற்கும் பருவத்தில் அல்லது நின்ற பின் குறைவதால், எலும்புகளின் வலிமை குறைகிறது. இதனால், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, எலும்புகள் எளிதில் உடையக் கூடிய, 'ஆஸ்டியோபோரோசிஸ்' வருவதற்கான வாய்ப்பு, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு நான்கு மடங்கு அதிகம்.

குறிப்பிட்ட வயதிற்கு முன், மாதவிடாய் நின்றவர்கள், பல காரணங்களால் கர்ப்பப்பை, கருக்குழாய்களை அகற்றியவர்களுக்கும், எலும்புகளின் வலிமை குறையும் வாய்ப்பு அதிகம்.

தசைகளின் வலிமை குறைவாக உள்ள பெண்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள், ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களுக்கு, இந்த பிரச்னை வரும் அபாயம் அதிகம். இந்தப் பிரச்னை இருப்பவர்கள், தடுமாறி விழுந்தாலே எலும்புகள் உடைந்து விடும்.

தசைகள் வலிமை இழப்பதால், முதுகு வலி, எலும்புகளில், தசைகளில் வலி வரும். நடை பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, 'ஜாகிங்' என, ஏதாவது உடற்பயிற்சியை தினமும், 30 நிமிடங்கள் செய்வது, எலும்புகள், தசைகளின் வலிமைக்கு உதவும்.

ரத்தப் பரிசோதனை செய்து, 'கால்ஷியம், விட்டமின் - டி' பரிசோதனை செய்து, அளவைத் தெரிந்து கொள்ள வேண்டும். எலும்புகளின் அடர்த்தியை தெரிந்து கொள்ள, அதற்கான பரிசோதனை உள்ளது; அதையும் செய்ய வேண்டும்.

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு, அசைவ உணவு பழக்கம் இருப்பவர்களைக் காட்டிலும், இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.



- ஸ்போர்ட்ஸ் மெடிசின்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us