தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/காணாமல் போகும் வெடிப்பு

காணாமல் போகும் வெடிப்பு

காணாமல் போகும் வெடிப்பு


PUBLISHED ON : ஜூன் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

கால் வெடிப்பு, தீராத வலியைக் கொடுக்கும். சிலருக்கு, சோப்பில் உள்ள ரசாயன ஒவ்வாமையால், ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கால் வெடிப்புகள் நீங்க, வழிகள் இருக்கின்றன.

வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். எலுமிச்சை சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறையும்.

இரவில், கை பொறுக்கும் சூட்டில், வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து, அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் இதுபோன்று செய்யவும்.

பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும். வீட்டுக்குள் காலணிகள் போட்டுக் கொள்வது சாலச்சிறந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள், எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

கடுகு எண்ணெயை, தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். முதல் நாள், பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு, வெடிப்புகளில் தேய்க்க வேண்டும்.

மறுநாள், தண்ணீரில் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.

வெந்தயக் கீரையை அரைத்து, கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.

மருதாணி பவுடருடன், டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து, பாதங்களில் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது, கால் வெடிப்பை நீக்கி, உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.

மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு அரைத்து, வெடிப்பில் பூசி வர குணமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us