உணவுக்கு பயன்படுத்தும் பொருட்களில், இஞ்சி அரிய மருத்துவ குணம் உள்ளவை. சைவம், அசைவம் இரு வகை உணவுக்கும் இஞ்சி சுவை தரும். நல்ல ஜீரண சக்தி கொண்டதாகவும் பயன்படுகிறது.
இஞ்சி பசியை தூண்டி, உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் நீக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, இஞ்சி தான் அதி முக்கியமான மருத்துவமாக கருதப்படுகிறது.
இஞ்சியை நீரில் காய்ச்சி அருந்தினால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி கிழங்கு வகையை சேர்ந்தது. இவை, மருத்துவப் பண்பு கொண்ட பொருளாகும். வாசனைக்காகவும், சுவைக்காவும் இணை உணவில் சேர்க்கப்படுகிறது.
நன்றாகக் காயவைத்துப் பதப்படுத்தப்பட்ட இஞ்சியின் கிழங்குகளே சுக்கு. இஞ்சியின் எல்லா மருத்துவக் குணங்களும், சுக்குவுக்கும் உண்டு. முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில், இஞ்சித் துண்டுகள் மூழ்கியிருக்குமாறு ஊறவைக்க வேண்டும்.
நன்கு ஊறிய பின், தினமும் இரண்டு துண்டுகள் வீதம், உணவுக்கு முன் மென்று சாப்பிட்டு வர பசியின்மை, வயிற்றுப் பொருமல் நீங்கும்.
இஞ்சி சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தினமும் மூன்று வேளை குடித்து வந்தால், வயிற்று வலி குணமாகும். தினமும் மூன்று வேளை, ஏழு நாட்களுக்கு பருகினால் சளியுடன் கூடிய இருமல் கட்டுப்படும்.
இஞ்சி துண்டுகளை, தேனில், 48 நாட்கள் ஊற வைத்து, தினமும், காலையில், ஒரு துண்டு வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.
நீண்ட நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்து வர, நரை, திரை, மூப்பு அணுகாது; தேகம் அழகு பெறும். இளமை நிலைத்திருக்கும்.
உடல் ஆரோக்கியமும் மேம்படும்.