தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரின் டைரி குறிப்பு ஏப்ரல் 20, 2016

டாக்டரின் டைரி குறிப்பு ஏப்ரல் 20, 2016

டாக்டரின் டைரி குறிப்பு ஏப்ரல் 20, 2016


PUBLISHED ON : ஏப் 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வருணை, பிறந்தபோது பார்த்தது தான். ஒன்பது மாதங்களுக்குப் பின், காய்ச்சலோடு அழைத்து வந்திருந்தனர். அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு செல்வதால், பாட்டியின் கவனிப்பிலேயே இருந்தான் வருண். பாட்டியோ வயதானவர்; எவ்வளவு வேலைதான் செய்வார்? என்னதான் வீட்டில் அனைத்து வேலைகளுக்கும் மிஷின்கள் இருந்தாலும், அது குறிப்பிட்ட வேலைகளை மட்டும் தானே செய்யும். மற்றவற்றை நாம் தானே செய்ய வேண்டும். வயோதிகம் காரணமாக, பாட்டியால் பல வேலைகளை கவனிக்க முடிவதில்லை. இதில் வருண் வேறு அடிக்கடி மலம், சிறுநீர் கழித்து விடுவான். ஆரம்பத்தில் சுத்தமான பருத்தி துணியைத் தான் அவன் இடுப்பில் கட்டி விடுவர். வருண் துணியை நனைத்ததும் துவைத்து, வெயிலில் உலர்த்தி மீண்டும் பயன்படுத்துவர். குழந்தையின் துணிகளை அடிக்கடி துவைக்க வேண்டியிருந்ததால், தண்ணீரில் புழங்க வேண்டிய காட்டாயம். பாட்டிக்கு சில நாட்கள் உடம்பு முடியாமல் போனது.ஹைஜீனிக்கானது துவைக்க வேண்டியதில்லை என்பதால், டயாப்பரை பயன்படுத்த ஆரம்பத்தினர் வருணின் பெற்றோர். அக்கம் பக்கத்தினர் கூட, 'டயாப்பர் பாய்' என்றே வருணை அழைக்க ஆரம்பித்து விட்டனர். வருணின் காய்ச்சலுக்கு காரணம், எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் டயாப்பர். இதனால் குழந்தையின் பின்பக்கங்கள், பிறப்புறுப்பு, தொடைகள் சிவந்து விட்டது. ஆரம்பத்தில் தோலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும்; பிறகு தோல் தடிப்பு ஏற்பட்டு வலி மற்றும் எரிச்சல் எடுக்க ஆரம்பிக்கும். கவனிக்காமல் விட்டு விட்டால், பூஞ்சைத் தொற்று ஏற்படும். இதனால் கொப்புளங்கள் உண்டாகி, சீழ் மற்றும் நீர் கோர்த்து பிரச்னை பெரிதாகும்.

சருமப் பிரச்னையால், பல குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுவதோடு, தோலின் மேற்புறத்தில் உள்ள நோய்த் தொற்று, கொப்புளங்களின் வழியே, உடலுக்குள் சென்று, குழந்தைக்கு பல பிரச்னைகளை உண்டாக்கும். வருணின் காய்ச்சலுக்கு மருந்தும், சரும பிரச்னைக்கு சில களிம்புகளும் எழுதி கொடுத்தேன். அதோடு, 'டயாப்பர்' பயன்படுத்துவதை தவிர்க்க சொன்னேன். பயணங்களின் போது மட்டும், பயன்படுத்த ஆலோசனை கூறினேன். அதையும், நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றச் சொன்னேன். சில வாரங்கள் கழித்து, மறு பரிசோதனைக்கு அழைத்து வந்த போது தோல் பிரச்னைகள் சரியாகி குழந்தைக்கே உரிய மென்மையான சருமமாக மாறியிருந்தது.

ஜெ.குமுதா

பேராசிரியர், பச்சிளம் குழந்தைகள் பிரிவு,சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

சென்னை. 94440 23733

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us