தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/"நீண்டதூரம் ஜாக்கிங் செய்வதால் மூட்டு பாதிக்குமா'

"நீண்டதூரம் ஜாக்கிங் செய்வதால் மூட்டு பாதிக்குமா'

"நீண்டதூரம் ஜாக்கிங் செய்வதால் மூட்டு பாதிக்குமா'


PUBLISHED ON : செப் 08, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2013


Follow on Google
அ நிறம் | அளவு

என் வயது 33. டென்னிஸ் விளையாடுவேன். ஆறு மாதங்களாக விளையாட முடியாத அளவு, தோள் மூட்டின் பின்பகுதியில் ஆழமான வலி உள்ளது. ஸ்கேன் பார்த்ததில் தோள்மூட்டில் நீர் கட்டி உள்ளதாக கூறுகின்றனர். நான் என்ன செய்வது?

தோள் மூட்டின் கிண்ணம் பகுதியின் விளிம்பில் உள்ள குருத்தெலும்பின் அடியில் நீர்க்கட்டி ஏற்பட்டால் நீங்கள் சொல்லும் வலி ஏற்படலாம். கையை உயர்த்தி விளையாடும் வீரர்கள் மத்தியில் இது சகஜம். இதை 'லேப்ரல் ஜிஸ்ட்' என்பர். மூட்டு நுண்துளை சிகிச்சையில் இந்த நீர்க்கட்டியை அகற்ற முடியும். மீண்டும் வராமல் இருக்கும்படியும் செய்யலாம்.

ஐம்பத்தி இரண்டு வயதான நான், விமானத்தில் செல்ல, லக்கேஜை தூக்க முயன்ற போது, தோள்பட்டையில் கடும் வலி ஏற்பட்டு, கைகளை உயர்த்த முடியவில்லை. வலி குறைந்த நிலையிலும், தோள்பட்டையை உயர்த்துவது சீராக இல்லை. எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பார்த்தபோது, 'ரொட்டேட்டர் கப் டீர்' (ROTATOR CUFF TEAR) என வந்து உள்ளது. இதற்கு என்ன சிகிச்சை உள்ளது?

தோள்பட்டையில் ரொட்டேட்டர் கப் கிழிந்து விட்டால் தோள்பட்டையை அசைக்கும் தன்மை சீர்குலைந்துவிடும். கூடிய விரைவில் இதை அறுவை சிகிச்சை மூலம் சீரைமைத்துக் கொள்ளுங்கள். தாமதிப்பவர்களுக்கு தோள்பட்டையை சீராக உயர்த்தும் தன்மையை இழப்பது மட்டுமின்றி, பிற்காலத்தில் மூட்டு தேய்மானம் அடைந்து சிரமப்படும் நிலைக்கு போவார்கள். சிகிச்சை செய்து கொண்டால், மூன்றே மாதத்தில் தோள்பட்டையை இயல்பாக தூக்கி சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

28 வயதான நான் தினமும் 10 கி.மீ., ஜாக்கிங் செய்கிறேன். தினசரி செய்வதால், என் மூட்டுக்கு பாதிப்பு வருமா? நண்பர்கள் எதிர்காலத்தில் மூட்டுவலி ஏற்படும் வாய்ப்புள்ளது என்கின்றனர். இதுசரியா?

பாதுகாப்பான முறையில், மிதமான வேகத்தில், தரமான 'ஷூ' அணிந்து, சீரான மேற்பரப்பில் ஜாக்கிங் செய்தால் உங்களுக்கு கட்டாயம் நன்மையே கிடைக்கும். இவ்வாறு செய்தால் மூட்டுக்கு நல்லதே தவிர ஆபத்து இல்லை. மூட்டுக்கு காயம் ஏற்படும் அளவிற்கு கீழே விழுவது, கரடுமுரடான மேற்பரப்புகளில் அதிவேகமாக ஓடுவது, 'வார்ம் அப்' செய்யாமல் ஓடுவது மூட்டுக்கு நல்லதல்ல.

- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,

மதுரை. 93442-46436


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us