இதயத்தில் ரத்த வினியோகம் எப்படி நடக்கிறது? பெ. பார்த்திபன், சென்னை
இதயம் என்பது, சதையால் ஆன, உட்கூடான ஓர் உறுப்பு. ரத்தத்தை உந்தி, ரத்தக் குழாய்கள் மூலம் வெளியேற்றுவது தான், அதன் பணி. ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு, இதயம், எந்தத் தடையுமின்றி இயங்க வேண்டியது அவசியம். இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்கள் அடைபடக் கூடாது. உடலில் பிரதான ரத்தக் குழாயான அயோட்டாவிலிருந்து (ச்ணிணூtச்) எழும்பும், இரண்டு கொரோனரி ரத்தக் குழாய்களிலிருந்து, இதயம் தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெறுகிறது. இடது மற்றும் வலதுபுற ரத்தக் குழாய்களான இவையிரண்டும், இதயத்தின் மேற்பரப்பு மீது ஓடி, கிளைகளாகப் பிரிகின்றன. இடதுபுற ரத்தக் குழாய், இரு முக்கிய கிளைகளாகப் பிரிகிறது. ஒன்று, இதயத்தின் முன்புறம், இடப்பக்கமாகக் கீழே இறங்குகிறது; மற்றொன்று, இதயத்தைச் சுற்றி வளைந்து இறங்குகிறது.
டாக்டர் எம்.ஆர்.கிரிநாத்,
அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.
பிளஸ் 2 மாணவனான நான், 'இசை கேட்பதால் நோய் குணமாகும்; நோயே வராது' என கேள்விப்பட்டேன். இது புற்றுநோய்க்கும் பொருந்துமா? சசிகுமார், ராமநாதபுரம்
புற்றுநோய்க்கும், இசைக்கும் பல தொடர்புகள் உள்ளன. புற்றுநோய் வந்தவர்கள் மெல்லிய இசையை கேட்பதால், அவர்களின் மனம் மகிழ்ச்சியடைந்து, உடம்பில் எதிர்ப்பு சக்தி வலுக்கிறது. இது மற்ற சிகிச்சை முறையுடன் வேலை செய்து, எளிதில் குணமாக்க உதவுகிறது. புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள், இனிமையான இசையை கேட்பதால், மனநிம்மதியுடன் அதிக நாள் உயிர்வாழ முடியும். இவை, இசையால், புற்றுநோய்க்கு ஏற்படும் பலன். மற்றபடி இசைக்கும், புற்றுநோய்க்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.
டாக்டர் மோகன்பிரசாத்
மதுரை