PUBLISHED ON : ஆக 26, 2012
இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது; பழைய உணவை சூடாக்கிச் சாப்பிடுவது; காலை, 8.00 மணிக்கு மேல் தூங்குவது; எப்போதும் நொறுக்கு தீனி சாப்பிடுவது; காய்கறிகள் இல்லாமல் மூன்று வேளையும், அரிசி சாதத்தை சாப்பிடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், தொப்பை, புகை பிடித்தல், மது அருந்துவது கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்கு, ஏன் மாரடைப்பு வருகிறது?
தினமும் நடை பயிற்சி, உடற்பயிற்சி செய்தால், ரத்த ஓட்டம் அதிகரித்து, ரத்தக் குழாய் அடைக்காமல் இருக்கும். நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதயம் வலுவாக இருக்கும். எந்நேரமும் எதிர்மறையாக இருப்பது; யாரையும் நம்பாமல், சந்தேகத்தோடு வாழ்வது; மூன்று வேளையும் சாப்பிடுவது; ஓசியில் கிடைத்தால், நிறைய சாப்பிடுவது; சிக்கன் பிரியாணி, இறால், முட்டை, மீன், மூளை என அனைத்தையும், ஒரே வேளையில் சாப்பிடுவது. அடிக்கடி இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள், பழைய உணவை சூடாக்கிச் சாப்பிடுவது; காலை, 8.00 மணிக்கு மேல் தூங்குவது; எப்போதும் நொறுக்கு தீனி சாப்பிடுவது; காய்கறிகள் இல்லாமல் மூன்று வேளையும், அரிசி சாதத்தை சாப்பிடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நல்ல மனநிலைக்கு, யோகா, தியானம் தேவை.மார்புவலி, மாரடைப்புக்கு, 'ஸ்டென்ட், பைபாஸ்' தீர்வு அல்ல; வாழ்க்கை முறை மாற்றம் தேவை.
மாரடைப்பில் எத்தனை வகை உண்டு? எந்த வயதினருக்கு மாரடைப்பு ஏற்படும்?
சர்க்கரையுடன் இருக்கும் மனிதர்களுக்கு மாரடைப்பு; ரத்தக் கொதிப்புள்ள மனிதர்களுக்கு மாரடைப்பு; அதிக டென்ஷன் உள்ளவருக்கு மாரடைப்பு; கெட்டக் கொழுப்புள்ளவருக்கு மாரடைப்பு; புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு; தொந்தியுள்ளவருக்கு மாரடைப்பு; 60, 70, 80 வயதுள்ளவர்களுக்கு வரும் மாரடைப்பு; இளம்மங்கையர், 30, 40 வயதினருக்கு மாரடைப்பு; மற்ற வியாதிகளால் மாரடைப்பு - இப்படி, மாரடைப்பில் பல விதங்கள் உள்ளன. யாருக்கு, எப்போது மாரடைப்பு வரும் என, முன்கூட்டியே அறிவது சாலச் சிறந்தது. எந்த நேரத்தில் மாரடைப்பு வரும் என்பதை, முன் கூட்டி அறிவிப்பது மருத்துவரின் கடமை.
மாரடைப்பு ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
ஊட்டச் சத்துக்களான, மாவு, கொழுப்பு, புரதம் தவிர, நுண்ணுயிர் சத்துகளான, வைட்டமின்கள், ஏ, டி, சி, பி, பி6, பி12, தாதுப் பொருட்களான, இரும்பு, மக்னீசியம், காப்பர், சோடியம், பொட்டாசியம், குளோரைடு என்ற, பல தாதுப் பொருட்கள், தேவையான அளவு இருக்க வேண்டும். இவற்றில் குறைபாடு ஏற்பட்டால், எரிச்சல், கால்களில் உணர்வு இல்லாமை, கண் எரிச்சல், உடல் அசதி, சோர்வு, கைகால் வலி, கால் மதமதப்பு, சதைப் பிடிப்பு, பசி இன்மை, இரும்புச் சத்து குறைபாடு ஆகியவை ஏற்படும்.
இயற்கை உணவுப் பொருள்களான காய்கறிகளில், பழங்களில், நிறைய கிடைக்கிறது. நம் முன்னோர்கள் தினமும், தெருவில் விற்கப்படும் காய்கறிகளை வாங்கி, உணவு சமைப்பர். இதனால், நிறைய நுண் சத்துக்கள் உடலுக்குக் கிடைத்தன. ஆனால் இன்று? காய்கறிகளையும், பாக்கெட் உணவுப் பொருள்களையும் பிரிஜ்ஜில் வைத்து, ஒரு வாரம், பத்துநாட்கள் வைத்து சமைத்து சாப்பிடுகிறோம். இவை வெறும் சக்கையே; நுண் சத்துக்களை இழந்து விடுகிறோம். காற்றோட்டத்தோடு உள்ள காய்களில் தான் நுண் சத்துக்கள் நிறைய உள்ளன. சமைத்த உணவு, மூன்று மணி நேரத்தில், சத்தை இழக்கிறது. இத்தகைய உணவு சாப்பிடுவதைத் தவிர்த்து, செடியிலிருந்து பறிக்கப்பட்டு, சில மணி நேரங்களே ஆன, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.
அதிக இன்சுலின் சுரப்பு எப்படி ஆபத்தாகிறது? அது எப்படி ரத்தக் குழாயை அடைக்கும்?
தினமும், அரிசிச் சோறு, அரிசியால் தயாரிக்கப்படும் இட்லி, தோசை சாப்பிடுவது; பாலிஷ் செய்யப்பட்ட மைதாவினால் செய்யப்பட்ட பரோட்டா, ரொட்டி, கேக், நூடுல்ஸ், பிட்சா சாப்பிடுவது; குளிர்பானங்கள் குடிப்பது; உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாமை; உப்பு சத்துள்ள உணவினால் உடலில் நீர் சேர்ந்து, ரத்தக் கொதிப்பு ஏற்படுதல்; அதிக கொழுப்பு உணவு சாப்பிடுதல் ஆகியவற்றால், கணையத்திலிருந்து, அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரக்கும். இதனால் கணையம், வெகு சீக்கிரத்தில் சோர்ந்து, செயலிழந்து விடும். இதன் பாதிப்பாக, இன்சுலின் சுரப்பு குறையும். இதனால், உடலில் குளூக்கோஸ் அளவு அதிகரித்து, அது ஜீரணமாகாமல், கெட்ட கொழுப்புகளாக, டி.ஜி.எல்., - எல்.டி.எல்., ஆக மாறி, ரத்தக் குழாய் உட்சுவரில் படிந்து, அடைப்பை அதிகமாக்குகிறது.
டாக்டர் அர்த்தநாரி
டாக்டர் எஸ்.ஏ., ஹார்ட் கிளினிக், 170/221, ராயப்பேட்டை ஹைரோடு, சென்னை - 14
Email: drsarthanaree@sify.com