தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நீர்க்கட்டிகள் கேன்சராக மாறுமா?

நீர்க்கட்டிகள் கேன்சராக மாறுமா?

நீர்க்கட்டிகள் கேன்சராக மாறுமா?


PUBLISHED ON : அக் 10, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் வரும் பிரச்னை, மார்பகங்களில் வரும் நீர்க்கட்டிகள் - பிரஸ்ட் சிஸ்ட். குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதை தாண்டியதும், பால் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இதனால், ஹார்மோன் சுரப்பது குறைந்து, பால் சுரப்பிகள் சுருங்கத் துவங்கும்.

எல்லா சுரப்பிகளும் ஒரே நேரத்தில் சுருங்காது; கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கும். சுருங்கும் போது, சுருங்குகிற இடைவெளியில் நீர் கோர்ப்பதால் ஏற்படுவது, 'சிஸ்ட்!'

இந்த சிஸ்ட் சிறியதாக இருந்தால், சிலருக்கு மாதவிடாய் வரும் போது வரும். அடுத்த முறை மாதவிடாயின் போது வராது. இப்படி, ஒரு முறை வரும்; அடுத்த முறை வராது என்ற ரீதியில், வரப் போக இருக்கும்.

இவை எல்லாம் கேன்ச ராக இருக்குமோ என்ற பயம் அவசியம் இல்லாதது; இதற்கு சிகிச்சையும் தேவை இல்லை.

சிலருக்கு, நிறைய நீர் கோர்த்து, கட்டி பெரியதாகி, நீர் கோர்க்க கோர்க்க விரிந்து, வலியைக் கொடுக்கும்; இதனால், தொற்று ஏற்படலாம். இப்படி இருந்தால், 'மேமோகிராம், ஸ்கேன்' எடுத்துப் பார்த்து, நீர்க் கட்டி தானா என்பதை உறுதி செய்யலாம்.

இதில் வேறு வளர்ச்சி எதுவும் இல்லை, வெறும் நீர் தான்; வேறு தொந்தரவும் இல்லை என்றால், அப்படியே விட்டு விடலாம். நீர்க்கட்டிக்குள் உள்ள திரவம் ரத்த கலரில் இருந்தால், 'பயாப்சி' எடுத்துப் பார்க்க வேண்டும்.

நீர்க்கட்டி கேன்சராக மாற வாய்ப்பில்லை. ஆனால், மாதவிடாய் நிற்கும், 'மெனோபாஸ்' வயதில், கட்டிகள் வந்தால், இது நீர்க்கட்டியாகத் தான் இருக்கும் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். மார்பில், புதியதாக கட்டி இருப்பது தெரிந்தால், டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா,

மார்பகப் புற்றுநோய் சிறப்பு மருத்துவர்,

சென்னை.

selvi.breastclinic@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us