PUBLISHED ON : அக் 10, 2021

முடி உதிர்வதற்கும், மன உளைச்சலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
'கோ மர்பிடிடி' எனப்படும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்தால், கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்துமோ, அது போல நீண்ட நாள் உடல் பிரச்னை இருந்தால், மனப் பிரச்னைகளால் முடி உதிரும்.
சில மன நோயாளிகளுக்கு, தலையில் குறிப்பிட்ட இடத்தில் முடி இல்லாமல் இருக்கும். இவர்கள் தாங்களாகவே முடியை பிடுங்கி விடும் பழக்கம் உள்ளவர்கள்.
இப்படி பிடுங்கிய முடியை பலர் சாப்பிட்டு விடுவதும் உண்டு. இவர்கள் தலையில் மட்டுமல்லாமல், கண் இமைகள், புருவம் இவற்றில் இருக்கும் முடியையும் பிடுங்கி சாப்பிடுவர்.
வயிறு வலி என்று சொல்லும் இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து பார்த்தால், வயிற்றில் கட்டியாக முடி உருண்டை இருக்கும்.
முடி, புரதச் சத்துக்களால் ஆனது. எனவே முட்டை, மாமிசம், பயறு வகைகள், 'நட்ஸ்' இவற்றுடன், முடிக்கு தேவையான விட்டமின்கள், தாதுக்கள், பனை வெல்லம், எள், கேழ்வரகு, பேரீச்சை, கீரை வகைகள், பழங்களில் இருக்கின்றன.
ஆதாரம்: அமெரிக்கன்
அகாடமி ஆப் டெர்மடாலஜி.

