தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/'மூட்டுவாத நோயால் கை, கால்கள் வளையுமா?'

'மூட்டுவாத நோயால் கை, கால்கள் வளையுமா?'

'மூட்டுவாத நோயால் கை, கால்கள் வளையுமா?'


PUBLISHED ON : அக் 20, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2013


Follow on Google
அ நிறம் | அளவு

என் தாய் வயது, 52. இளம் வயதில் மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டவர். கைகளும், கால்களும் வளைந்து காணப்படுகிறது. முழங்கால் மூட்டுகள் இரண்டிலும், மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 28 வயதான எனக்கும், இரண்டு மாதங்களாக, மணிக்கட்டு வலி உள்ளதால், ரத்தப் பரிசோதனை செய்ததில், மூட்டுவாத நோய் உள்ளதாக தெரிகிறது. எனக்கும், என் தாயைப் போல கை, கால்கள் வளைந்து விடுமா?

மூட்டுவாத நோய், அதாவது ருமாட்டிக் ஆர்த்ரைட்டீஸ் நோய், ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், அதற்கு நவீன மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. அதை முறையாக மருத்துவரின் கண்காணிப்புடன் எடுத்துக் கொண்டால், நன்றாக கட்டுப்படுத்த முடியும். கை, கால்கள் வடிவம் மாறுவதை, தடுக்க முடியும். நீங்கள் மருத்துவரை சந்தித்து, தகுந்த சிகிச்சை எடுக்கவும்.

என் மகனின் வயது, 8. மூன்று மாதங்களுக்கு முன், மணிக்கட்டு எலும்பு முறிந்தது. மணிக்கட்டு மேல், சற்று வடிவம் மாறி காணப்படுகிறது. வடிவம் மாறி இருந்தாலும், செயல்பாட்டில் எந்த குறையும் இல்லை. மாறிய வடிவம் வயதாகும் போது சீரமையுமா?

செயல்பாட்டில் குறை இல்லை என்பது, ஆறுதல் தரும் விஷயம். பத்து வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, எலும்பு முறிந்தால், தானாக அதன் வடிவம் சீரமையும் வாய்ப்பு உள்ளது. இதே எலும்பு முறிவு, வளரும் பகுதியான, 'குரோத் பிளேட்டில்' காயம் ஏற்பட்டு இருந்தால், வடிவம் சீரமையாது. இதை மனதில் கொண்டு, டாக்டரிடம் ஆலோசிக்கவும்.

டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,

மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us