தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஒரு பக்க நுரையீரலை எடுத்தால், திருமணம் செய்யலாமா?

ஒரு பக்க நுரையீரலை எடுத்தால், திருமணம் செய்யலாமா?

ஒரு பக்க நுரையீரலை எடுத்தால், திருமணம் செய்யலாமா?


PUBLISHED ON : அக் 20, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2013


Follow on Google
அ நிறம் | அளவு

நான், 25 வயது பெண். நுரையீரலில் பிரச்னை இருப்பதால், அறுவை சிகிச்சை செய்து, ஒரு நுரையீரலை முழுவதுமாக எடுக்க வேண்டும் என, டாக்டர் கூறுகிறார். இதனால் பிரச்னை உண்டா? நான் திருமணம் செய்து கொள்ள முடியுமா? குழந்தை பெறுவதில் சிக்கல் உள்ளதா?

உங்கள் வலது பக்க நுரையீரலை எடுக்க நேர்ந்தால், மொத்த நுரையீரலின் செயல் திறனில், 60 சதவீதம் குறைந்து விடும். உங்களது இடதுபக்க நுரையீரலை எடுக்க நேர்ந்தால், 40 சதவீத செயல் திறன் குறைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில், நுரையீரலின் ஒரு பகுதியை மட்டும் நீக்க வேண்டி இருக்கும். அது போன்ற சமயங்களில், எந்தப் பகுதி நுரையீரலை எடுக்கிறோமோ, அந்த நுரையீரலின் செயல்திறனில் மேல்பகுதி எனில், 40 சதவீதம், கீழ்ப்பகுதியை நீக்கினால், 60 சதவீதம், நடுப்பகுதியை மட்டும் நீக்கினால், 25 சதவீதம் செயல் திறன் குறைய வாய்ப்பு உள்ளது. இரு நுரையீரலில் ஒன்றை நீக்கினால், நுரையீரலின் செயல்திறன் குறையுமே தவிர, வேறு எந்த தொந்தரவும் ஏற்படாது. நீங்கள் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். அதில் பிரச்னை இல்லை. குழந்தை பெறுவதிலும் சிக்கல் இருக்காது.

எனக்கு, ஆறு மாதங்களாக இருமல், இளைப்பு இருந்தது. இன்ஹேலர் உபயோகிக்க டாக்டர் அறிவுறுத்தினார். ஒருமாதத்தில் சரியானது. இன்ஹேலரை உபயோகித்து, மருந்து ஏற்றிக் கொள்ளும்படி டாக்டர் கூறுகிறார். தொந்தரவு இல்லாதபோதும் உபயோகிக்க வேண்டுமா?

நீங்கள் ஒருமாதம் இன்ஹேலர் மூலம் மருந்து எடுத்ததில், உங்களுக்கு இருந்த இருமல், மூச்சுத் திணறல், இளைப்பு போன்றவை, கண்டிப்பாக குறைந்து இருக்கும். ஆனால் உங்கள் நுரையீரலின் உள்பக்கம் உள்ள அலர்ஜி, வீக்கம், மூச்சுக்குழாய் சுருக்கம், முழுவதுமாக குணமடைந்து இருக்காது. இன்ஹேலரை நிறுத்துவது என்பது இருமல், சளி, மூச்சுத் திணறல், இளைப்பு தொந்தரவை பார்த்து தீர்மானிப்பது அல்ல. அது, நுரையீரலின் செயல் திறனை பரிசோதித்து, அதன்பின், படிப்படியாக நிறுத்த வேண்டிய ஒன்று.

அதற்கு, 'ஸ்பைரோமீட்டர்' என்ற பரிசோதனை செய்து, அதில் உங்கள் நுரையீரலின் செயல்திறன், 80 சதவீதத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில், கொஞ்சம், கொஞ்சமாக மருந்தின் அளவை குறைத்து, அதன்பின் நிறுத்த வேண்டும். அதுவரை, உங்கள் டாக்டர் கூறியது போல, கட்டாயமாக இன்ஹேலரை தொடர்ந்து எடுப்பது நல்லது.

டாக்டர் எம். பழனியப்பன், மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us