உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 13, 2013

அ நிறம் | அளவு
வி.பார்த்திபன், கமுதி: 'அம்லோடிபின்' ரத்த அழுத்த மாத்திரையால், பக்க விளைவுகள் வரும் என்பது உண்மையா?
அம்லோடிபின் ரத்தக் கொதிப்பு மருத்துவத்தில் மிகச் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இது, உயர் ரத்த அழுத்தத்தை நன்கு குறைப்பதுடன், இதன் பக்க விளைவும், மிக மிக குறைவு. அம்லோடிபின் மாத்திரையை எடுப்பதால், இதயம், இதய ரத்த நாளங்களுக்கும் நல்ல பலன் கிடைக்கிறது. இந்த மாத்திரையை எடுக்கும் சிலருக்கு, கால் வீக்கம், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த மருந்தை தொடர்ந்து எடுப்பது மிகவும் நல்லதே.
