sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

"வலிக்குதே...' என அலற வேண்டாம்!

/

"வலிக்குதே...' என அலற வேண்டாம்!

"வலிக்குதே...' என அலற வேண்டாம்!

"வலிக்குதே...' என அலற வேண்டாம்!


PUBLISHED ON : ஜூலை 29, 2012

Google News

PUBLISHED ON : ஜூலை 29, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளைஞர்களை, வலி அதிகமாக பாதிக்கிறது. இதற்கு, அவர்களின் வாழ்க்கை முறையே காரணம். சினிமாவில் காட்டப்படும், 'டிஜிட்டல் சிக்ஸ் பேக்' உடலைப் பார்த்து, அது போன்ற கட்டுடல், தனக்கு கிடைக்க வேண்டும் என, தப்புக் கணக்கு போடுகின்றனர்.

வாழ்நாள் முழுவதும் அகிம்சைக்காகப் பாடுபட்ட காந்திஜி, வலியால் துடித்த, ஒரு கன்றுக் குட்டியைக் கொன்று விடுமாறு சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறோம். அத்தகைய கொடுமையான வலிக்கான தீர்வு தான், மருத்துவத்தின் ஒரு பிரிவான, 'அல்ஜியாட்ரி!' எல்லாருக்கும் புரியும் மொழியில் சொல்வதானால், 'வலி

நிர்வாகத் துறை!': ஒரே ஒரு ஊசி மூலம், பக்க விளைவுகள் ஏதும் இன்றி, வலியிலிருந்து நிவாரணம் தரும். இந்த சிகிச்சையில், பெர்குடானியஸ் நியூக்ளியோடமி - பி.சி.என்., என்பது, ஒரு முறை.

ஜவ்வில் ஊசி செலுத்தி...: 'நியூக்ளியோடம்' கருவியை இணைத்து, ஒரு சிறிய ஊசி மூலமாக, எந்த ஜவ்வில் பிரச்னை இருக்கிறதோ, அந்த ஜவ்வுக்குள் ஊசியைச் செலுத்தி, அந்தப் பிரச்னையைச் சரி செய்யலாம். அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே, சரி செய்ய முடியும் என்ற பிரச்னைகளையும், இந்த பி.சி.என்., முறை மூலம் சரி செய்யலாம். 'ரேடியோ பிரிகுவன்சி அபலேஷன்' - ஆர்.எப்.ஏ., என்பது, மற்றொரு சிகிச்சை முறை. அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி உள்ளவர் மற்றும் வயதானவர்களும் கூட, இந்த சிகிச்சை மூலம் நிவாரணம் தரலாம். எந்தவித ஆபத்தும் கிடையாது. இது, மருத்துவத் துறை நமக்கு அளித்திருக்கும், ஒரு வரப்ரசாதம்.



மூட்டு வலிக்கு, 'ஓசோன்' ஊசி



இந்தியர்களை அதிகமாக பாதிக்கக் கூடிய பிரச்னை, மூட்டு வலி. அவர்களுக்கும் அறுவை சிகிச்சை இல்லாமல், முழங்காலில், 'ஓசோன்' ஊசி போட்டு குணப்படுத்தலாம். இதற்கான மருந்து, தூயக் காற்று. அதை வெளிநாட்டிலிருந்து வரவழைத்த கருவியின் மூலம், சிகிச்சைஅளிக்கும் நேரத்தில் தான் தயாரிக்க வேண்டும். தயாரிக்கும் முன், நோய் என்ன வகை, எத்தனை நாள் போன்ற

விஷயங்களை கவனிக்க வேண்டும். 'ஓசோன்' வலியை மட்டும் சரி செய்யாமல், வலிக்கான காரணத்தையும் சரி செய்வதாகும். உதாரணமாக, 'ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்' என்ற மூட்டு வலிக்கு, முழங்காலில் ஊசி போடுவதன் மூலம், எலும்பு, சவ்வு அல்லாத, வளையும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் போன்றிருக்கும் குருத்தெலும்புகளை, அவற்றின் தேய்மானத்தில்இருந்து குணப்படுத்தலாம். குருத்தெலும்புகளைத் திரும்ப வளர வைக்கக் கூடிய திறன், 'ஓசோனு'க்கு உண்டு.

கண்டமேனிக்கு பளு தூக்கினால்...

வயதானவர்களுக்கு மட்டுமே வரக் கூடிய பிரச்னையாக இல்லாமல், இளைஞர்களையும் அதிகமாக வலி பாதிக்கிறது. இதற்கு, அவர்களின் வாழ்க்கை முறையே காரணம். உதாரணமாக, சினிமாவில் காட்டப்படும், 'டிஜிட்டல் சிக்ஸ் பேக்' உடலைப் பார்த்து, அது போன்ற கட்டுடல், ஆறு வாரங்களில் தனக்குக் கிடைக்க வேண்டும் என, தப்புக் கணக்குப் போடுகின்றனர்.

இதற்காக, தகுதியான பயிற்சியாளரிடம் போகாமல், ஏதோ ஒரு ஜிம்முக்கே, பளு தூக்கிகளைக் கண்டமேனிக்குத் தூக்குவதால், முதலுக்கே மோசமாகி, உடல் நலன் இழந்த பலர், என்னிடம் சிகிச்சைக்காக வந்திருக்கின்றனர். தண்டு வடத்தின் ஜவ்வுகள் பிதுங்கி, தாள முடியாத வேதனைக்கு ஆளானவர்களையும், நான் குணப்படுத்தி இருக்கிறேன்.

ஜவ்வு பிதுங்கினாலும் சரி செய்யலாம்

இது தவிர, இரு சக்கர வாகனத்தில் அதிகமாக பயணிப்பது, உட்கார்ந்த இடத்திலேயே கணினியில் வேலை பார்ப்பது, அதிக பளுவான தண்ணீர் குடத்தை சடாரெனத் தூக்குவது, கனமான பொருட்களை எடுத்துக் கொண்டு மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்ற விதங்களில், உடலை வருத்தி, வலியை வரவழைத்துக் கொள்பவர்களும் உண்டு. இதுபோன்ற ஜவ்வு பிதுங்குதல் உள்ளிட்ட, தண்டுவடத்தில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் அனைத்துக்கும், அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவு இல்லாமல், மேற்கண்ட முறைகள் மூலம் தீர்வு தரலாம். பெண்களில், 20 முதல் 35 வயது வரை உள்ளவர்களை பாதிப்பது, 'பிப்ரோமியால்ஜியா' எனும் நிலை. அதாவது, இன்ன இடத்தில் தான் என சொல்ல முடியாத படி, உடல் முழுக்க வலி, அசதி இருக்கும். அவர்களுக்கு எடுக்கப்படும், ரத்தப் பரிசோதனை துவங்கி, எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ., வரை, எல்லாமே நார்மலாக இருக்கும்.



'டூப் விடுறியா?'


இதனால், அவர்களின் கணவரோ, மற்ற உறவினர்களோ அந்தப் பெண் சும்மா சொல்கிறாரோ என கூட, சந்தேகிப்பர் அல்லது மனோ தத்துவப் பிரச்னையாக இருக்குமோ என்றும் நினைப்பர். உண்மையில், அந்தப் பெண்ணுக்கு உடல் வலி இருப்பதென்னவோ, நூறு சதவீத உண்மை. இது தான், 'பிப்ரோமியால்ஜியா!' இதற்கும், 'அல்ஜியாட்ரி' எனும் நவீன வலி நிர்வாகத் துறை மூலமாக, தீர்வு இருக்கிறது. முதியவர்களுக்கு ஏற்படக் கூடிய தோள்பட்டை வலிக்கு, 'பெரி ஆர்த்ரைட்டிஸ் - ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்' எனும் நிலை, காரணமாக இருக்கும். 'இன்டிரர்டிகல்' என்ற சிகிச்சை மூலமாக, இதைக் குணப்படுத்த முடியும்.

தலைவலிக்கு பல காரணங்கள்

தலைவலிப் பற்றி தனியாக, ஒரு புத்தகமே போட முடியும். அத்தனை வகைகள்; அத்தனை காரணங்கள்; அத்தனை சிகிச்சை முறைகள். உதாரணமாக, ஒருவருக்கு தலைவலி என, குடும்ப மருத்துவரிடம் போகிறார். என்னனென்னவோ மருத்து மாத்திரைகளைக் கொடுத்துப் பார்த்தும், வலி குறையவில்லை. நோயாளியின் கண்ணில் பிரச்னை இருக்குமோ என கருதி, கண் மருத்துவரிடம் அவரை அனுப்புகிறார், குடும்ப மருத்துவர். கண் மருத்துவர் பரிசோதித்ததில், கண்ணில் எந்தப் பழுதும் இல்லை. அதே சமயம், நோயாளிக்குப் பல்லில் பிரச்னை இருப்பது தெரிகிறது. எனவே, பல் மருத்துவரிடம் அனுப்பப்படுகிறார். பல் மருத்துவர் சிகிச்சையளித்த பிறகும், தலைவலி மட்டும் குறையவில்லை. திரும்பவும் குடும்ப மருத்துவரிடம் போகிறார். அவர், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனைக்கு அனுப்புகிறார். அதிலும், எந்தப் பிரச்னையும் இல்லை. கடைசியாக வலி நிர்வாகத் துறையின் மூலமாக தான், அவரது தலைவலி குணமானது.

புற்றுநோய்க்கு, 'கேங்கிலியன் பிளாக்'

தலைவலிகளில் கொடுமையான, 'மைக்ரேன்' ஒற்றைத் தலைவலிக்கும், வலி நிவாரணத் துறையின் நவீன சிகிச்சைகள் மூலமாக குணப்படுத்த முடியும். எந்த நோயானாலும், வலியானாலும் தனக்குத் தானே மருந்து எடுத்துக் கொள்வது தவறு. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படக் கூடிய வலியை, 'கேங்கிலியன் பிளாக்' சிகிச்சை முறைப்படி, முழுமையாகத் தீர்க்க முடியும். வலிக்குரிய உடல் உறுப்பிலிருந்து, மூளைக்குச் செல்லும் நரம்பில், சற்று தடுப்பை ஏற்படுத்தி, வலி இல்லாதவாறு செய்யலாம்.

செடிக்கு உரம் போல உடலுக்கு, 'ஓசோன்'

டெங்கு, சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல் என, எந்த காய்ச்சல் வந்து போனாலும், அதன் விளைவாக சிலருக்கு, சில வாரம், மாதம் அல்லது வாழ்நாள் முழுவதும் கூட, உடல் வலி அல்லது மூட்டு வலி இருக்கும். அவர்களுக்கும், 'ஓசோன்' ஊசி சிகிச்சை இருக்கிறது. ஒரு செடிக்கு உரம் போல, ஓசோன் செயல்படுகிறது. அது குருத்தெலும்புகளின் கட்டுமானத்தை ஊக்குவித்து, உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், அதற்குப் புத்துயிர் அளித்து, செயல்படுவதற்கான உற்சாகத்தையும் அளிக்கிறது. இதுதவிர, அதி நவீன சிகிச்சை முறைகளாக, 'ஸ்பைனல் கார்டு ஸ்டிமுலேட்டர், இன்ட்ரார்டிகல் பம்ப், பொட்டுலினியம் இன்ஜக்ஷன், டிரிகர் பாயின்ட் இன்ஜக்ஷன்' போன்றவையும் பயனளிக்கக் கூடியவை.

டாக்டர் பிரபு திலக்

தொடர்புக்கு: 98407 88888






      Dinamalar
      Follow us