PUBLISHED ON : ஜூலை 22, 2012

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பி.குமாரவேலுச்சாமி, வாடிப்பட்டி: 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்ததில், இதயத்தின் ஒரு ரத்தக் குழாயில், 50 சதவீத அடைப்பு உள்ளதாக வந்துள்ளது. இதற்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியமா?
பொதுவாக, 70 சதவீதத்திற்கு கீழ் அடைப்பு இருந்தால், மருந்து மூலம் சிகிச்சை அளிப்பதே போதுமானது. 70 சதவீதத்திற்கு மேல் இருந்தால், 'ஸ்டென்ட்' அல்லது, 'பைபாஸ் சர்ஜரி' முறையே தேவைப்படும்.