PUBLISHED ON : டிச 16, 2023

'முழங்கால் மூட்டுவலி நடுத்தர மற்றும் வயது முதிர்ந்த நபர்களுக்கு ஏற்படுகிறது; உரிய சிகிச்சை அளித்தால் விரைவில் குணப்படுத்தலாம்' என்கிறார், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஆலோசகர் கோகுலகிருஷ்ணன்.
அவர் கூறியதாவது:மூட்டுவலியால் அவதிப்படுவோருக்கு, வலிக்கான காரணத்தை கண்டறிந்து, தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஏற்றார்போல் சிகிச்சை முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உடல்பருமன் குறைத்தல், வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள், தேவைப்படும் மருந்து உட்கொள்ளுதல், இயன்முறை பயிற்சிகள் (Physiotherapy), நோயாளிகளுக்கு ஏற்றார் போல் மாறுபடும்.
முழங்கால் மூட்டுவலி தொடரும் பட்சத்தில், நவீன ஸ்டெம்செல்(PRP) ஊசி மற்றும் ஹைலூரோனிக் அமில ஊசி வாயிலாக, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவை பயனளிக்காதபோது, முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். உரிய பயிற்சிக்குப் பின், நோயாளி விரைவில் குணமடைவார்.
தோள்பட்டை வலியால் அவதிப்படுவோருக்கு, அதற்கான காரணத்தை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் வாயிலாக துல்லியமாக கண்டறிந்து, நவீன சிகிச்சை அளிக்கிறோம்.
ஆரம்பகட்டத்தில், மருந்து உட்கொள்ளுதல் மற்றும் சிறப்பு பயிற்சி வாயிலாக எளிதில் குணப்படுத்த முடியும். நவீன சிகிச்சை முறையான யு.எஸ்.ஜி., கெய்டட் பிஆர்பி ஊசியை, தோள்பட்டையில் செலுத்தி, முற்றிலும் வலியை போக்கலாம்.
இச்சிகிச்சை வாயிலாக, பலருக்கு தோள்பட்டை வலியிலிருந்து நிரந்தர தீர்வு அளித்துள்ளோம். வலி தொடரும் பட்சத்தில், நுண்துளை அறுவை சிகிச்சை வாயிலாக தீர்வு காணப்படும்.
சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தோள்பட்டை வலி மற்றும் அசைவின்மை 70 சதவீதம் ஏற்படும். இவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து, முற்றிலும் குணப்படுத்தலாம்.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், இதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 0422 450 0000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.