தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/மருந்து மாத்திரைகளால் மருவை சரி செய்ய முடியாது!

மருந்து மாத்திரைகளால் மருவை சரி செய்ய முடியாது!

மருந்து மாத்திரைகளால் மருவை சரி செய்ய முடியாது!


PUBLISHED ON : டிச 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரு என்பது என்ன?

மருவில், இரு வகைகள் உள்ளன. சொரசொரப்பாக, வியர்க்குரு போல இருப்பதை, மரு என்று சொல்வோம். இது, வைரஸ் தொற்று; பரவக் கூடியது. மருவை தொட்டுவிட்டு, உடம்பின் மற்றொரு இடத்தை தொட்டால், அந்த இடத்திலும் மரு வந்து விடும். இன்னொன்று, கழுத்தைச் சுற்றி கறுப்பாக, குட்டி குட்டி உருண்டையாக, தோலில் இருந்து வரக்கூடிய வளர்ச்சி. இது, தொற்று கிடையாது என்பதால் பரவாது. பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்குமே தவிர, மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. இரண்டு வைரஸ் வகைகள், மருவை உண்டாக்கும். ஒன்று, தோலில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மற்றொன்று, பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துவது.

மரு எப்படி பரவுகிறது?

கால்களில் செருப்பு இல்லாமல் நடக்கும் போது, தரையில் இருக்கும் வைரஸ் கிருமிகள், கால்களில் ஒட்டிக் கொள்ளலாம். தொற்று பாதிப்பு உள்ளவர்களை தொட்டு பேசும் போது, கைகளில் வரலாம். தாம்பத்திய உறவின் வாயிலாகவும் பரவலாம்.

சிகிச்சை முறைகள் என்ன?

மருந்தோ, மாத்திரைகளோ கொடுத்து, மருவை சரி செய்ய முடியாது. பிறப்புறுப்பில் இருந்தால், ரத்தப் பரிசோதனை செய்து, அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில், களிம்பு மருந்துகளை பயன்படுத்தி சரி செய்யலாம்.வெளிப்புறத்தில் தடவும் மருந்துகளால், இரண்டு வாரத்தில் மரு உதிராவிட்டால், லேசர் சிகிச்சை மூலம், மருவை அகற்ற வேண்டியிருக்கும். திரவ நைட்ரஜனை தெளிப்பதால், சிறு மருக்கள் தானாகவே விழுந்து விடும். அளவில் பெரியதாக இருந்தால், அறுவை சிகிச்சை செய்வது ஒன்றே வழி.

ஒரு முறை நீக்கிய மரு, மீண்டும் வர வாய்ப்பு உள்ளதா?

திரும்ப வருவதற்கான வாய்ப்புகள், 10 - 15 சதவீதம் உள்ளது. லேசர் சிகிச்சை முடிந்து, புண் ஆறிய பின்னும், தொடர்ந்து மருந்துகள் தடவ வேண்டி இருக்கும்.

தோலின் நிறம் மாறுவது எதனால்?

சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள், செல்களில் ஏற்படுத்தும் பாதிப்பால், நிறமிகள் அதிகமாகி விடுகின்றன. இதற்கு, 'ஹைபர் பிக்மென்டேஷன்' என்று பெயர். இதனால் தான், தோலின் நிறம் மாறுகிறது. இதைக் காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை, தினம் நாம் பயன்படுத்தும், லேப் - டாப், கம்ப்யூட்டர், பிரகாசமான விளக்கு ஒளியிலிருந்து வரும் கதிர்கள்.தோலின் பாதிப்பிற்கு ஏற்ப, மருத்துவரின் ஆலோசனையுடன், இரவு வேலை செய்பவர்களும் தவறாமல், 'சன் ஸ்கிரீன்' பயன்படுத்த வேண்டும்.தோலின் நிறம் மாறி உள்ளது என, அழகு நிலையங்களுக்குச் சென்று, 'டீ டான், பிளீச்' செய்வது தவறான பழக்கம். கடினமான வேதிப் பொருட்களை பயன்படுத்தி, தோலின் அடி ஆழம் வரை அழுத்தம் கொடுக்கும் போது, இயற்கையாக தோலில் உள்ள பாதுகாப்பு அம்சங்களையே பாதித்து விடும்.

நிறமி குறைபாட்டிற்கு என்ன காரணம்?

ஹார்மோன் மாறுபாடுகளால் தான், பெரும்பாலும் பெண்களுக்கு, நிறமி குறைபாடு வரும். நீர்க்கட்டிகள் இருக்கும் பெண்களுக்கு, தோலின் நிறம் கறுப்பாக மாறும்; தேவையற்ற ரோமங்கள் முளைக்கலாம்; தலை முடி கொட்டும். ஆண்களுக்கு, பொடுகு தலையில் இருந்தாலும், முகம், கழுத்துப் பகுதியில் உள்ள தோல் தடித்து, கறுத்து போகும். உடலில் ஏற்படும் சில வகை கோளாறுகளாலும், தோல் கறுப்பாக மாறும்.

டாக்டர் சினேகலதா கிருஷ்ணமூர்த்தி

தோல் மருத்துவர்

சென்னை

99419 39309, 99419 95547


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us