தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/'பிரஷ்' செய்வதற்கே பிரத்யேக பயிற்சி தேவை!

'பிரஷ்' செய்வதற்கே பிரத்யேக பயிற்சி தேவை!

'பிரஷ்' செய்வதற்கே பிரத்யேக பயிற்சி தேவை!


PUBLISHED ON : மார் 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளுக்கு பல் தொடர்பான பிரச்னைகள், குறிப்பாக பல் சொத்தை அதிகமாக காணப்படுகிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன், பல் சொத்தை பிரச்னைகள் அதிகம் இருந்ததில்லை. தாத்தா, பாட்டி காலத்தில், நார்ச்சத்து மிகுந்த, இயற்கை முறையில் விளைந்த உணவுகள், கரும்பு, பழங்கள் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிட்டனர். இவை அனைத்தும், தானாகவே பற்களை சுத்தம் செய்யும் தன்மை உடையவை.

இன்று, கார்போஹைட்ரேட், மாவு சத்து உணவுகள், நொறுக்குத் தீனிகளை அடிக்கடி சாப்பிடுகிறோம். இவை, பல் இடுக்குகளில் சிக்கி, ஒட்டிக் கொள்ளும் தன்மை உடையவை.

முன் வரிசை பற்களில், சொத்தை இருக்கும் குழந்தையை கவனித்தால், அவர்கள் சிரிப்பதை தவிர்ப்பர்; மீறி சிரித்தாலும், உதடுகளை மூடிய படியே சிரிப்பர். இதன் காரணமாக, அவர்களின் தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது.

பால் பல்லின் கீழ், நிரந்தர பல் இருக்கும். பல் சொத்தையின் காரணமாக, பால் பல்லை நாம் எடுத்து விட்டால், நிரந்தர பல் அதன் சரியான இடத்திற்கு வர முடியாமல், இடுக்கு பற்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இரு பற்களின் இடுக்குகளில் சொத்தை இருந்தால், அவை பல்லின் அகலத்தை குறைத்து விடும்; இதனால், அதற்கு பின் இருக்கும் பல், முன்னே சாய்ந்து நகரத் துவங்கும். இதனால், நிரந்தர பல்லிற்கு சரியான இடம் கிடைக்காமல், குறுக்கும், நெடுக்குமாக வளரும்.

இதை சரிசெய்ய, 'கிளிப்' அணிய வேண்டி வரும். பால் பல்லில் இருக்கும் சொத்தை, நிரந்தர பல்லிலும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

குழந்தைக்கு, 'பிரஷ்' செய்யும் பழக்கத்தை, முறையாக கற்று தருவதற்கே பயிற்சி உள்ளது. குழந்தையின் வலது கையில் பிரஷை கொடுத்து, 180 டிகிரி கோணத்தில் நேராக நீட்டச் சொல்லி, வலது கையை கடிகாரச் சுற்று முறையில், சற்று பெரிய வட்டமாக, தொடர்ந்து சுழற்றச் செய்ய வேண்டும். பின், மெல்ல மெல்ல வட்டத்தைக் குறைக்கச் செய்து, சிறிய வட்டமாகச் சுழற்றி, ஒரு கட்டத்தில், கையிலுள்ள பிரஷை, வாயில் வைக்கச் சொல்ல வேண்டும்.

இப்படி செய்யும் போது, ஈறு மற்றும் பற்கள் இரண்டிலும் பிரஷ் படும்படி இருக்க வேண்டும்.

தொடர்ந்து மேல் மற்றும் கீழ் வரிசைப் பற்களை சுத்தம் செய்ய கற்றுத்தர வேண்டும். இதை விளையாட்டு என்று நினைத்து, ஆர்வமாக குழந்தை செய்யும். கார்ட்டூன் பொம்மைகள், பல நிற பிரஷை வாங்கித் தந்தால், குழந்தைகள் இதை ஆர்வமாகச் செய்வர்; இதனால், பிரஷ் செய்வது ஒரு பழக்கமாக மாறும்.

உறங்கச் செல்லும் முன், சாக்லேட், இனிப்புகள் தருவது, உணவுக்கு நடுவில் நொறுக்குத் தீனி சாப்பிடுவது, பாட்டில் பாலை வாயில் வைத்தே உறங்கச் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மற்ற நேரங்களில் சாக்லேட் சாப்பிடும் போது, தண்ணீரில் வாய் கொப்பளிக்க பழக்க வேண்டும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிட பழக்க வேண்டும்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்வது அவசியம்.

டாக்டர் ஆர்.வி.அபராஜிதா,

வேர் சிகிச்சை சிறப்பு பல் மருத்துவர்,

கல்பாக்கம்.

94980 25872

drrvaparajitha@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us