தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மணிக்கட்டில் தாங்க முடியாத வலி

மணிக்கட்டில் தாங்க முடியாத வலி

மணிக்கட்டில் தாங்க முடியாத வலி


PUBLISHED ON : டிச 23, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பல ஆண்டுகளாக நான் டேபிள் டென்னிஸ் ஆடி வருகிறேன். பந்தை அடிக்க திரும்பும் போது மணிகட்டில் தாங்க முடியாத அளவிற்கு வலி ஏற்படுகிறது. இது எதனால்?

மணிக்கட்டு அசைக்கும் போது வலி என்றால் மணிக்கட்டை சுற்றியுள்ள தசை நாரில் உள் வீக்கம் இருக்கலாம். குறிப்பாக 'எக்ஸ்பென்சர் காரிப் அல்நாரிஸ்' என்கிற தசை நார் வீக்கம் அடையலாம். மணிக்கட்டில் அசைவு கட்டுப்படுத்த ஒரு 'ஸ்பிலின்' போட வேண்டும். அப்படி செய்தும் சரியாகவில்லை என்றால் உங்களுக்கு 'டிரெய்ங்குலார் பிப்ரோ கார்ட்டிலேஜ்' என்று சொல்லப்படும் ஒரு உறுப்பில் அடிபட்டு இருக்கலாம். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தால் அதை உறுதிப்படுத்த முடியும். நுண்துளை சிகிச்சையில் குணப்படுத்த முடியும். மீண்டும் வலியின்றி டேபிள் டென்னிஸ் ஆட முடியும்.

* கடந்த 3 ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு தற்போது மூட்டு மாற்று சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். மூட்டு மாற்று சிகிச்சையை பற்றி மருத்துவமனைகளில் விசாரிக்கும் போது விலையில் மிகவும் வேறுபாடு உள்ளது. நான் என்ன செய்வது?

இந்தியாவில் தற்போது மூட்டு மாற்று சிகிச்சையின் விலை சரியாக நிர்ணயிக்கப்படவில்லை. மூட்டு மாற்று சிகிச்சை செய்யும் போது கடைப்பிடிக்கப்படும் பல நெறிமுறைகள் அதன் வெற்றியை நிர்ணயிக்கும். முதலில் முக்கியத்துவம் கொடுத்து அதன் பின் விலையை பற்றி யோசிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள தலை சிறந்த மையங்களின் மூட்டு மாற்று சிகிச்சையின் வெற்றி 98 சதவீதமாகும். இதற்கு காரணம், அங்கு பின்பற்றப்படும் வழிமுறைகள்.

உதாரணமாக அறுவை சிகிச்சை அரங்கில் கட்டட அமைப்பு, அறுவை சிகிச்சை அரங்கில் பின்றபற்றப்படும் ஒழுங்குமுறைகள், அரங்கின் வெப்பநிலை அறுவை சிகிச்சை பாகங்களுக்கு கொடுக்கப்படும் நீர் புகா உறைகள், அனைத்து நெறிமுறைகளையும் தரமாக செய்வதில் மிக்க செலவாகிறது.

இது மட்டுமின்றி இந்த செயற்கை மூட்டு, வெளிநாட்டு செயற்கைமூட்டு என்று பல வேறுபாடுகள் உள்ளன. இவற்றிலும் தரம் மற்றும் விலையில் வேறுபாடு உள்ளன. அனைத்து வழிமுறைகளும் கடினமாக கடைப்பிடித்து உயர்தரமாக செய்யப்படும்போது வெற்றி விகிதம் வெளிநாடுகளுக்கு இணையாக அமைகிறது. ஆனால் ஒரு சாதாரண நோயாளியால் இதை கண்டுபிடிப்பது இயலாத காரியம். தேசிய அளவில் மருத்துவமனைகளின் தரம் என்று பார்க்கும் போது என்.ஏ.பி.எச்., அங்கீகாரம் ஒரு அளவுகோலாகும். அவ்வாறு என்.ஏ.பி.எச்., முத்திரை கொண்ட மருத்துவமனைகளில் நல்ல தரம் எதிர்பார்க்க முடியும். நீங்கள் தரத்திற்கும், அறுவை சிகிச்சையில் உள்ள சிறப்பு அனுபவத்துக்கும் முதலிடம் கொடுத்து விலையை விவாதிக்கவும்.

- டாக்டர் கே.என். சுப்பிரமணியன்

எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், மதுரை

93442 46436


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us