sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/நுரையீரலை தாக்கும் தழும்பு நோய்

நுரையீரலை தாக்கும் தழும்பு நோய்

நுரையீரலை தாக்கும் தழும்பு நோய்


PUBLISHED ON : டிச 23, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நுரையீரல் தழும்பு நோய் என்றால் என்ன?

நுரையீரலில் உண்டாகும் தழும்பு நோய் என்பது 'கிரானைட் போலீஸ்' பறவைகளால் ஏற்படும் அலர்ஜி மற்றும் மாசு கலந்த காற்றை சுவாசித்தல் உட்பட பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இந்த நோய் உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். எந்த காரணத்திற்காக தழும்பு உண்டாகியது என்பதை கண்டறிந்து சிகிச்சை செய்ய வேண்டும். பல நோயாளிகளுக்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்வதிலேயே சிரமம் உண்டாகும். அந்த வகையான நோயாளிகளுக்கு மருந்து மூலம் சிகிச்சை அளித்து நோய் மேலும் பரவாமல் தடுக்கலாம்.

* என் வீட்டு மொட்டை மாடியில் புறாக்கள் உள்ளது. அதற்கு உணவு வழங்க தினமும் செல்வேன். சமீப காலமாக எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. இதற்கும் புறாவுக்கும் சம்மந்தம் உண்டா?

புறாக்களில் இருந்து வெளிப்படும் கழிவுப் பொருள் அதன் இறக்கையுடன் சேர்ந்து காற்றில் கலந்து நோயை உண்டாக்கலாம். நிறைய புறாக்கள் இருந்தால்தான் நோய் ஏற்படும் என்பதில்லை. ஒரு புறா இருந்தால் போதும், அதற்கு நோயை உருவாக்கும் சக்தி உள்ளது. எனவே கவனமுடன் இருப்பது அவசியம்.

* என் மகனுக்கு தொடர்ந்து இருமல் இருந்து கொண்டே இருந்தது. மருத்துவரை அணுகி மருந்து உட்கொண்ட பின்பும் விடவில்லை. இது எதனால்?

பொதுவாக பல காரணங்களால் இருமல் உண்டாகிறது. ஜலதோஷம் பிடித்தல், நுரையீரலில் பிரச்னை, வயிற்றுக் கோளாறு, செரிமானம், காது மூக்கு மற்றும் தொண்டை பிரச்னை உள்ளவர் என பல காரணங்களால் உண்டாகிறது. இதை கண்டறிந்து சிகிச்சை செய்தால் இருமல் சரியாகி விடம். ஒரு சில இருமல் வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் இருமல் 6 வாரங்கள் வரை இருக்கும்.

* 'புளுரிஸி' என்றால் என்ன?

நுரையீரலை சுற்றியுள்ள ஒரு மெல்லிய சவ்வு பகுதியில் உண்டாகும் வீக்கமே புளுரிஸி எனப்படும். இந்த வீக்கம் வைரஸ், பாக்டீரியா போன்ற பல காரணங்களால் உண்டாகிறது. இதனால் நம் பெரிய மூச்சு விடும் போது நெஞ்சில் வலி உண்டாகும். எதனால் வீக்கம் உண்டாகி உள்ளது என்பதை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை செய்தால் நோய் குணமாகும்.

- டாக்டர் மா. பழனியப்பன்,

நுரையீரல் சிறப்பு நிபுணர், மதுரை.

94425 24147


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us