PUBLISHED ON : ஆக 21, 2022

ஆயுர்வேதத்தில், அரிசி பற்றி, 'ரத்த சாலி' என்ற பெயரில் தனி அத்தியாயம் உள்ளது; இதில் நம்முடைய பாரம்பரிய அரிசியை பயன்படுத்துவதன் வாயிலாக, எந்தெந்த உடல் பிரச்னைகளை சரி செய்ய முடியும் என்று விரிவாக விளக்கப்பட்டு உள்ளது.
சிவப்பு அரிசி, எல்லா அரிசிகளையும் விட சிறந்தது என்று கூறப்படுகிறது. பாராம்பரிய அரிசி வகைகளை தமிழகத்தில், பல இயற்கை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இதில், 'மாப்பிள்ளை சம்பா' என்ற அரிசி, நீரிழிவைக் கட்டுப்படுத்தக் கூடியது. இந்த அரிசியை மட்டும் சாப்பிட்டால், ஆறு மாதங்களில் ரத்தத்தில் சர்க்கரை இயல்பு நிலைக்கு வந்து விடும்.
சிவப்பு நிறத்தில் உள்ள அரிசி தான் எல்லாவற்றையும் விட சிறந்தது என்று சொல்லப்பட்டு உள்ளது.
மாப்பிள்ளை சம்பா, காட்டு யானம், நவரா, வால் சிவப்பு, கறுப்புக் கவுனி போன்ற, சில வகை சிவப்பரிசி வகைகள் எளிதாக கிடைக்கின்றன. பாரம்பரிய அரிசி குறித்து தற்போது விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. ரத்தசாலி என்ற நல்ல சிவப்பு நிறத்தில், சிறிய மணிகளாக உள்ள அரிசி, ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
நான்கு மணி நேரம் ஊற வைத்து, கஞ்சியாக காய்ச்சி குடிப்பதால், ரத்த சோகை உள்ளவர்களுக்கு விரைவிலேயே சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சாதாரண நிலைக்கு வருவதாக உறுதி செய்யப்பட்ட ஆய்வுகள் உள்ளன.
மழைக்காலத்தில் அதிகமாக தொற்று நோய்கள் பரவும் என்பதால், இந்த அரிசி கஞ்சியை குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காரணம், எளிதாக செரிமானம் ஆகக் கூடிய இதில், ஜிங்க், விட்டமின் பி5, கால்சியம் சத்துக்கள் அதிகம். கர்ப்பிணிகள், பாலுாட்டும் பெண்கள், ரத்த சோகை உள்ளவர்கள், 'டயட்'டில் இதை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- அஷ்டாங்க ஹிருதயம்