PUBLISHED ON : ஆக 28, 2022
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இயற்கைக்கும், மனதிற்கும் உள்ள தொடர்பு பற்றி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பல்கலையில் ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்டது. வாரத்தில் நான்கு நாட்கள், தினமும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் தோட்ட வேலைகள் செய்தால், பதற்றம், மன அழுத்தம், படபடப்பு உட்பட அனைத்து மனப் பிரச்னைகளும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடுவதாக ஆய்வு கூறுகிறது.
அதற்காக தோட்டம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பதில்லை; தொட்டியில் சில செடிகளை முழு ஈடுபாட்டுடன் வளர்த்தாலும், இதே பலன் கிடைப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- 'பப்ளிக் லைப்ரரி ஆப் சயின்ஸ்!'