PUBLISHED ON : ஆக 28, 2022

நடை பயிற்சிக்கு நேரம் இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம். சாப்பிட்டவுடன் சிறிது நேரத்திற்கு ஒரே இடத்தில் நின்றாலே, ரத்த குளூக்கோஸ் அளவு கணிசமாக குறைகிறது. சாப்பிட்டதும் ஒரே இடத்தில் உட்காருவதற்கு பதில் எழுந்து நிற்க வேண்டும். இதனால், குளூக்கோஸ் அளவும், இன்சுலின் அளவும் குறைகிறது.
எந்த நேரத்தில் சாப்பிட்டா லும், சாப்பிட்டதும் இரண்டு நிமிடங்கள் மெதுவாக, சீராக நடக்க வேண்டும். இந்த இரண்டு நிமிடத்தில் 100 அடிகள் நடந்தால், ரத்த குளூக்கோஸ் அளவு குறையும்.
இது பற்றி ஏழு வெவ்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இவற்றில் முதல் ஐந்து ஆய்வுகளில், பங்கு பெற்றவர்களுக்கு 'டைப் 2' சர்க்கரை கோளாறு இல்லாதவர்கள்; எதிர்காலத்தில் வருவதற்கான வாய்ப்பும் இவர்களுக்கு இல்லை. மற்ற இரண்டு ஆய்வுகளில், டைப் 2 சர்க்கரை கோளாறு உள்ளவர்கள் பங்கேற்றனர்.
இவர்கள் அனைவரையும் நாள் முழுதும், 20 - 30 நிமிடங்களுக்கு ஒரு முறை, ஐந்து நிமிடங்கள் நடக்கச் சொன்னதில், ரத்த சர்க்கரை அளவு குறைந்தது. அதே நேரத்தில் சாப்பிட்டவுடன் உட்காராமல், எழுந்து இரண்டு நிமிடங்கள் நடக்க வேண்டும். அப்போதும் ரத்த சர்க்கரை குறைந்தது. இப்படி நடப்பது, செரிமானத்திற்கு மட்டுமல்ல... டைப் 2 சர்க்கரை கோளாறு வருவதையும் தடுக்கும் என்று உறுதியானது.
குறிப்பாக, சர்க்கரை கோளாறு உள்ளவர்கள், சாப்பிட்டதும் உட்காராமல், சிறிது துாரம், குறைந்தது 100 அடி நிதானமாக நடந்தால், ரத்த குளூக்கோஸ் அளவு குறையும்.
- 'ஸ்போர்ட்ஸ் மெடிசின்'