sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

சொல்லத் தெரியாமல் தவிக்கும் குழந்தைகள்!

/

சொல்லத் தெரியாமல் தவிக்கும் குழந்தைகள்!

சொல்லத் தெரியாமல் தவிக்கும் குழந்தைகள்!

சொல்லத் தெரியாமல் தவிக்கும் குழந்தைகள்!


PUBLISHED ON : ஆக 21, 2022

Google News

PUBLISHED ON : ஆக 21, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தற்போது உள்ள சூழலில், பல குழந்தைகளுக்கு மனப் பிரச்னைகள் உள்ளன; பிரச்னையின் தன்மை மட்டுமே மாறுபடுகிறது. பள்ளி, கல்லுாரிகளுக்குச் சென்று, மன நலம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினால், ஒவ்வொரு குழந்தையும் வெளியில் சொல்லத் தயங்கும் ஏதோ ஒரு பிரச்னையில் சிக்கி இருப்பது புரியும்.

குழந்தைகள், தங்களின் பிரச்னைகளை பேசுவதற்கு நம்பிக்கையான இடம் வேண்டும். அதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம். பிரச்னைகளை குழந்தைகள் சொல்லும் போது, கேட்பவர் அதை சரியான கோணத்தில் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டியது முக்கியம்.

எங்களின் 'ஸ்கார்ப்' அமைப்பு, மன நல சிகிச்சை மையம் என்பதால், அங்கு வருவதற்கு குழந்தைகள் தயங்குகின்றனர். 'மன நோய் சிகிச்சை மையத்திற்கு, ஆலோசனைக்கு அனுப்பினால், குழந்தைக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என வெளியில் தெரிந்து விடுமே...' என்று பெற்றோர் பயப்படுகின்றனர்.

அதனால் தான், ஸ்கார்ப் வளாகத்தில் இல்லாமல், சென்னை ஆயிரம் விளக்கு, தபால் நிலையம் எதிரில், ஒரு ஆலோசனை மையத்தை ஆரம்பித்துள்ளோம். குழந்தைகளுக்கு பலவிதமான குழப்பங்கள் உள்ளன. குறிப்பாக, உறவினர்கள், நட்பு வட்டாரங்கள், பெற்றோருடன், குழந்தைகளுக்கு உறவுப் பிரச்னை இருக்கிறது.

'ஸ்கிரீன் அடிக் ஷன்' எனப்படும், 'மொபைல் போன், லேப்டாப்'பில் அடிமையாக இருப்பதும், அதிலிருந்து வெளியில் வர முடியாமல் தவிப்பதும் தெரிகிறது. வளர் இளம் பருவத்தில், குழந்தைகளின் பிரச்னைகளை பெற்றோர் புரிந்து கொள்ளாததால், தற்கொலை எண்ணங்கள், மன அழுத்தம், மனப் பதற்றம் போன்றவை குழந்தைகளிடம் அதிக அளவில் இருக்கிறது.

இது போன்ற மன நலப் பிரச்னைகள் உள்ள குழந்தைகள், தங்கள் பிரச்னைகள் குறித்து, எங்கே, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

எப்படி தெரிந்து கொள்வது?



முதல் அறிகுறி, சோகமான உணர்வு. தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் இல்லாமல் இருப்பது, பள்ளி, கல்லுாரிக்கு செல்ல மாட்டார்கள்; தங்கள் வயதையொத்த குழந்தைகளுடன் பேசி விளையாட மாட்டார்கள்.

சில குழந்தைகளுக்கு, அந்த வயதுக்கு மீறிய, 'நான் ஏன் வாழணும்?' என்ற எண்ணம் வரும்; தற்கொலை எண்ணங்களும் வரலாம். சரியாக சாப்பிடாமல், துாங்காமல் இருப்பர். இந்த மனநிலையில் இருந்து வெளியில் வருவதற்கு, மொபைல் போனில் பல மணி நேரம் செலவிடுவர்; அதுவே பிரச்னையைப் இன்னும் பெரிதாக்கும்.

சரியாக பள்ளிக்கு செல்லாமலும், வீட்டுப் பாடம் செய்யாமல் இருந்தாலும், பெற்றோர் கவனிக்க வேண்டும். குழந்தையின் வழக்கமான நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால், வகுப்பு ஆசிரியரும் கவனித்து, மன நல ஆலோசனை பெற வழி செய்ய வேண்டும்.

சிகிச்சை முறைகள்



மருந்துகள் மட்டும் சிகிச்சை கிடையாது. மன நலப் பிரச்னைகளில் இருந்து வெளியில் வருவதற்கு ஆதரவாக பல தெரபிகள் உள்ளன. பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, ஆலோசனை போதுமா, நடத்தை மாற்ற தெரபி வேண்டுமா, மருந்து, மாத்திரைகள் தேவை இருக்கிறதா என்பதை முடிவு செய்து, தகுந்த ஆலோசனைகள் தருவோம்.

டாக்டர் ஆர்.பத்மாவதி,

இயக்குனர்,

'ஸ்கார்ப்' அமைப்பு, சென்னை.

97917 97834







      Dinamalar
      Follow us