தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் ஆளி விதைகள்

புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் ஆளி விதைகள்

புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் ஆளி விதைகள்


PUBLISHED ON : ஜன 13, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஆளி விதையை (பிளாக்ஸ் சீட்ஸ்) சாப்பிடும் முறை என்ன ?

ஆளி விதைகள் என்பது சிறிய அளவில், பிரவுன் நிறத்தில் இருக்கும். ஆளி விதையின் அளவு சிறிது ஆனால், பயன்கள் அதிகம். ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது துாவி சாப்பிடலாம். மோரில் கலந்து தினமும் பருகலாம்.

* ஆளி விதை எந்த நோயை குணமாக்கும் ?

ஆளி விதையில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போல செயல்பட்டு புற்று நோய் தாக்கத்தை எதிர்த்து போராடும். இதில் உள்ள லிக்னன்கள், உடலினுள் கெமிக்கல்களால் மாற்றப்பட்டு உடலில் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மார்பகம், புரோஸ்டேட், குடல் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும். கரையாத நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது.

* இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளன ?

ஆளி விதையில் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, கனிம சத்துக்களான மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஈ, சருமம், எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும். பொட்டாசியம் நரம்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கும், இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களை பாதுகாத்து உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

* ஆளி விதையில் பெண்களுக்கான பயன்

ஈஸ்ட்ரோஜெனிக் பண்புகளின் காரணமாக ஆளி விதைகளில் உள்ள லிக்னன்கள் மாதவிடாய் நின்ற பெண்களைத் தாக்கும் ஆஸ்டியோ போரோசிஸ், இருதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கும். எனவே தினமும் பெண்கள் ஒரு கையளவு ஆளி விதை சாப்பிடுவதால், வயதான நேரத்து பிரச்னைகளை தவிர்க்கலாம்.



மதுமிதா

ஓமியோபதி மருத்துவ நிபுணர்

மதுரை. 93630 44444


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us