PUBLISHED ON : ஜன 13, 2019

தொண்டையில் உறுத்தல் ஏற்பட்டு இருமல் வருகிறது? தீர்வு என்ன
உப்பு, மிளகு சம அளவு எடுத்து இளவறுப்பாக வறுத்து, பொடியாக்கி வைத்துக் கொண்டு விரல் அளவு சாப்பிட்டு வந்தால் இருமல் நிற்கும்.
பனிக்காலத்தில் அடிக்கடி தொண்டை கட்டி சளி பிடிக்கிறது. என்ன செய்யலாம் ?
ஒரு லிட்டர் சூடான நீரில் 4-5 துளசி இலைகளை போட்டு இளஞ் சூடாக்கி குடித்தால் தொண்டைக்கட்டு, சளி பிரச்னை நீங்கும்.
காலில் பித்த வெடிப்பால் வரும் வலி தீர என்ன செய்ய வேண்டும் ?
கஸ்துாரி மஞ்சள், ஆளி விதையை பொடியாக்கி விளக்கெண்ணெய் கலந்து குழப்பி பித்த வெடிப்புள்ள இடங்களில் தடவினால் விரைவில் குணமாகும்.
தோலின் மேல் பகுதி மற்றும் முகம், கழுத்தில் முடிச்சு, மரு அதிமுள்ளது ?
கஸ்துாரி மஞ்சள், கடுக்காய் தோல், வெள்ளை மிளகு, வேப்பங்கொட்டை, நெல்லிக்காய் தோல் ஆகியவற்றை சம அளவு மையாக அரைத்து துணியில் சலித்து சூடான பால் கலந்து மரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் அலசி குளித்தால் மருக்கள் விழுந்து விடும். மரு விழும் வரை வாரம் 2 அல்லது 3 முறை செய்யலாம்.
தலையில் பொடுகு அதிகம் உள்ளது, முடி உதிர்கிறது தீர்வு என்ன ?
வெட்பாலை இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள் தடவி, தேங்காய் எண்ணெயில் லேசாக பொறித்து வடிகட்டி, எண்ணெய் சூடு ஆறிய பின் தலையில் தடவி குளித்தால் பொடுகு நீங்கும், முடி உதிர்வது குறையும்.
ஜெ.ஜெயவெங்கடேஷ்
சித்த மருத்துவர், மதுரை.
98421 67567
