தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பாதம் பராமரிப்பு முக்கியமானது

பாதம் பராமரிப்பு முக்கியமானது

பாதம் பராமரிப்பு முக்கியமானது


PUBLISHED ON : செப் 23, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ... அதே போல் நம் பாதத்தின் அழகும் முக்கியம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதங்களை பராமரிப்பது ரொம்ப முக்கியம்.



ஆனால், பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில், சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் பிரச்னை பித்த வெடிப்பு ஏற்படும். 'என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது' என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.



பித்தவெடிப்பை விரட்டுவதற்கான சில 'டிப்ஸ்':



* பப்பாளி பழத்தை நன்கு மைபோல் அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.



* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.



* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற பொருட்களால் தேய்த்து கழுவினால், பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதோடு, பாதமும் மென்மையாக இருக்கும்.



* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.



* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானதுதானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.



* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.



* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.



* இரவில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதங்களை சுத்தமாக வைக்காவிட்டால், வெடிப்பு, புண்கள் ஏற்படும். இவற்றை குணப்படுத்த மிகவும் சிரமம்.



* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us