PUBLISHED ON : ஆக 14, 2022

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தவறாமல் உடற்பயிற்சி செய்வது, சமச்சீரான உணவு சாப்பிட்டு உடல் எடையை சீராக பராமரித்தல் மண்ணீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும். பச்சை காய்கறிகள், கேரட், பீட்ரூட், வெள்ளரி, முள்ளங்கி, புதினா, பூண்டு, வெங்காயத் தாள், முளைகட்டிய தானியங்கள், தேங்காய், கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, பைனாப்பிள், பப்பாளி, மாதுளை, அத்திப் பழம், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி ஆகியவை உணவில் இடம் பெற வேண்டும்.
காய்கறிகளும், பழங்களும் ரத்த சிவப்பணுக்கள் உருவாக முக்கிய காரணம். ரத்த சோகையுடன் இருப்பவர்கள், ஆட்டின் மண்ணீரலை வாரத்திற்கு இரு முறை சாப்பிட்டால், ஒரே மாதத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இன்றும் கிராமப்புறங்களில், சுத்தம் செய்த ஆட்டு மண்ணீரலை, வெறுமனே விறகடுப்பில் வாட்டி, ரத்த சோகையான குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் உள்ளது.