sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மனநிலைக்கும் மண்ணீரலுக்கும் உள்ள தொடர்பு!

/

மனநிலைக்கும் மண்ணீரலுக்கும் உள்ள தொடர்பு!

மனநிலைக்கும் மண்ணீரலுக்கும் உள்ள தொடர்பு!

மனநிலைக்கும் மண்ணீரலுக்கும் உள்ள தொடர்பு!


PUBLISHED ON : ஆக 14, 2022

Google News

PUBLISHED ON : ஆக 14, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரோக்கியமாக வாழ, உடல் உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். உடனே நாம் அனைவரும், பிரதான உறுப்புகளான இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் என்று தான் நினைப்போம். இதற்கு இணையாக மண்ணீரல் இருப்பது பெரும்பாலும் தெரியாது.

நிமோனியா, மூளைக் காய்ச்சலை உருவாக்கும் குறிப்பிட்ட சில வகை பாக்டீரியா தொற்றுகளிடம் இருந்து பாதுகாப்பது உட்பட, நிறைய வேலைகளை செய்கிறது மண்ணீரல். கல்லீரலுக்கு அருகில் வயிற்றின் இடது பக்கம் உள்ள மண்ணீரலின் முக்கிய வேலை, ரத்தத்தை உருவாக்கி, சேமித்து, வடிகட்டி, நோய் எதிர்ப்பு காரணிகளை உருவாக்கி, உடலைப் பாதுகாக்கிறது.

பழைய ரத்த சிவப்பணுக்கள் மறுசுழற்சி செய்யப்படுவதும் மண்ணீரலில் தான். தட்டணுக்கள், வெள்ளை அணுக்களை மண்ணீரல் தன்னுள்ளே சேமித்து வைக்கிறது. மண்ணீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான், மனிதனின் செயல்களும், சிந்தனையும் தெளிவாக இருக்க முடியும், முழுத் திறனுடன் செயலாற்ற மனிதனால் இயலும். எனவே மனநிலைக்கும், மண்ணீரலுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது.

இன்னொரு முக்கிய பணி, முதிர்ந்த ரத்த சிவப்பணுக்களை அழித்து, மூளை, நரம்பு மண்டலத்தைத் துாண்டி, இதயம், மூளையை இயல்பாக வைக்க உதவுகிறது. மண்ணீரல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், சில சமயங்களில் உயர் ரத்தம் அழுத்தம் ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்படும்.

ரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண்ணுயிரிகளை அழித்து, சிறுநீரகங்கள் இயல்பாக செயல்பட உதவுவது, வெளியில் இருந்து உடலுக்குள் நுழையும் தொற்று கிருமிகளை ரத்தத்தில் இருந்து அழிப்பதும் மண்ணீரலின் முக்கிய பணி. இதோடு சேர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டி, ரத்தத்தின் வழியே பரவும் தொற்றுகளில் இருந்தும் காக்கிறது.

மண்ணீரல் கோளாறுகள்



விரிவடைந்த மண்ணீரல்: இந்த நிலையில் இயல்பான செயல்பாட்டை விட வேகமாக செயல்படும். வலி, சிறிதளவு சாப்பிட்டாலும், நிறைய சாப்பிட்ட உணர்வு ஏற்படும். இது அபாயகரமான அறிகுறி. காரணம், மண்ணீரலில் கிழிசல், ரத்தக் கசிவு இருந்தால் இது போல ஏற்படலாம். சில சமயங்களில் கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகள் மண்ணீரல் விரிவடைய காரணமாக அமையும்.

மலேரியாவை உருவாக்கும் ஒட்டுண்ணிகளால் மண்ணீரல் பாதிக்கப்பட்டால், மண்ணீரலின் உள்ளே சிதைவு ஏற்பட்டு, உள்ளேயே வீக்கமும், ரத்தக் கசிவும் ஏற்படலாம்.

போதுமான அளவு தட்டணுக்கள் இருந்தால் தான் அடிபடுவது, விபத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பு, உறைதலின் வாயிலாக தவிர்க்கப்படும்.

ஆனால் தேவைக்கு அதிகமாக தட்டணுக்கள் சேரும் போது, மண்ணீரல் பாதிக்கப்படும். போதுமான அளவு ரத்தம் கிடைக்காவிட்டால் பாதிப்பு வரும்

.

பாதிப்பின் அறிகுறிகள்



வேகமான இதயத் துடிப்பு, வாந்தி, மயக்கம், உடல் எடை அதிகரிப்பு, வயிற்றில் அபரிமிதமான வலி, தொண்டை உலர்ந்து போவது, உடல் முழுதும் வலி, கால்களில் வீக்கம், சாப்பிட்டதும் துாக்கம் வருவது, எல்லா நேரமும் சோர்வாக உணர்வது, மஞ்சள் காமாலை, உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற சிறுநீர்.

மண்ணீரல் பாதிப்பிற்கு காரணங்கள்: அடிக்கடி மன அழுத்தம் ஏற்படுவது, கோபம், எரிச்சல், மது, சிகரெட் பழக்கம் போன்றவை. இதயத்தைப் போலவே மண்ணீரலும் ரத்தத்தை உறிஞ்சும் தன்மை உடையது என்பதால், ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகமானால் மண்ணீரல் பாதிக்கும்.

இரைப்பை, பித்தப்பை, வயிற்றில் புண், கல்லீரல் அழற்சி, மண்ணீரலை பாதிக்கும்.

சிகிச்சை



பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். மிதமான பாதிப்பு இருந்தால், மதுவைத் தவிர்த்து, உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்தால் போதும். தீவிர பாதிப்பு இருந்தால் மண்ணீரலை அகற்றி விடுவோம்.

ஆரோக்கியத்தில் மிகப் பெரிய பங்கு வகித்தாலும், மண்ணீரல் இல்லாமலும் வாழ முடியும். இந்நிலையில், கல்லீரல், நிணநீர் கட்டிகள் இதன் பணியை செய்யும். அதே சமயத்தில் மண்ணீரலை அகற்றியவர்களுக்கு அடிக்கடி தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் வேறு கோளாறுகள் உடலில் இருப்பவர்களுக்கு மண்ணீரலும் அகற்றப்பட்டால், மேலும் பாதிப்புகள் அதிகமாகலாம்.

டாக்டர் கபாலி நீலமேகம்

ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர்,

சென்னை.







      Dinamalar
      Follow us