sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

"கன்னத்தில் அடிக்கடி வீக்கம் வருவதேன்'

/

"கன்னத்தில் அடிக்கடி வீக்கம் வருவதேன்'

"கன்னத்தில் அடிக்கடி வீக்கம் வருவதேன்'

"கன்னத்தில் அடிக்கடி வீக்கம் வருவதேன்'


PUBLISHED ON : ஜன 20, 2013

Google News

PUBLISHED ON : ஜன 20, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எனக்கு கடந்த ஒரு மாதமாக கன்னத்தில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறது. சாப்பிடும்போது வீக்கம் அதிகமாகிறது. சிலமணி நேரத்தில் குறைகிறது. இது எதனால்?

நம் வாய்க்கு உமிழ்நீர் வரும் பாதையில் கல்உருவாகி, அடைப்பு ஏற்படும்போது இத்தகைய வீக்கம் வரும். உமிழ்நீர் நாம் உணவு உண்பதற்கும், வாயை சுத்தமாக வைத்திருப்பதற்கும் அவசியமான ஒன்று. உமிழ்நீர் சுரப்பிகள் கன்னத்தின் இருபுறமும் உள்ளன. உமிழ்நீரில் உள்ள கால்சியம் மற்றும் மற்ற ரசாயனங்கள் சேர்ந்து சில சமயம் கல் போன்று உருவாகும். இவை உமிழ்நீர் வரும் பாதையை அடைத்து விடும்.சயலோலித்தியாசிஸ் எனப்படும் இந்த நிலை, வாய் உலர்வாக உள்ளவர்களுக்கு சுலபமாக வரக்கூடும். சில மாத்திரைகளாலும், இவை உருவாகும். எக்ஸ்ரே அல்லது சிடி ஸ்கேன் மூலம் இவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இக்கற்கள் 2.3 மில்லி மீட்டர் அளவிற்குள் இருந்தால், நிறைய தண்ணீர் குடித்தல், சூடான ஒத்தடம் வைத்தல் அல்லது அவ்விடத்தில் லேசான அழுத்தம் தருதல் போன்றவற்றால் அவை தானாக வந்துவிடும்.சற்று பெரிய கற்களாக இருந்தால் சிறிய அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம். ஆரம்ப நிலையில் இவற்றை சரிசெய்தல் நல்லது. இல்லையெனில் கிருமிகள் சேர்ந்து வலி மற்றும் சீழ் உண்டாகும். தகுந்த நேரத்தில் உரிய சிகிச்சை பெற்றால் இந்த வீக்கம் முற்றிலும் குணமடையும்.

எனது மேல்தாடையில், முன்பற்கள் இரண்டின் நடுவில், பெரிய இடைவெளி உள்ளது. பேசும்போதும், சிரிக்கும்போதும் பார்ப்பதற்கு நன்றாக இல்லை. இதை சரிசெய்ய ஏதாவது வழி உள்ளதா?

முன்பற்களின் நடுவே உண்டாகும் இடைவெளிக்கு 'டயஸ்டிமா' என்று பெயர். இதை சரிசெய்யும் முன், இது உருவாவதற்குரிய காரணத்தை கண்டறிதல் முக்கியம். முன் பற்களின் நடுவில் இடைவெளி வருவதற்கு, தாடை பெரியதாக இருந்து, பற்கள் சிறியதாக இருப்பது ஒருகாரணம். மேலும் பற்களின் நடுவே பால் பற்கள் விழாமல் இருந்தாலோ, அல்லது எலும்பில் கட்டி இருந்தாலோ உதட்டுக்கும், பற்களுக்கும் நடுவே சதை வளர்ந்தாலும் இந்த இடைவெளி உருவாகும். பற்கள் இயற்கையாகவே சிறியதாக இருப்போருக்கு, பற்களில் கம்பி போட்டு, சீரமைக்கலாம். 'செராமிக் வெனியர்' எனப்படும் சிகிச்சை முறையும் உபயோகப்படுத்தலாம். இதுவே பால் பற்களோ அல்லது கட்டியோ இருந்தால், அதனை கண்டிப்பாக அகற்ற வேண்டும். உதட்டில் இருந்து பற்களுக்கு சதை வளர்ந்து இருந்தால், 'ப்ரீனெக்டமி' என்னும் சிகிச்சை முறையின் மூலம் இதை அகற்றலாம். இவ்வாறு இடைவெளிக்கான காரணத்தை சரிசெய்தால், அவை தானாக சரியாகும். சரியான பின்பும், ஆண்டுக்கு ஒருமுறை பல் டாக்டரிடம் சென்று, பரிசோதனை செய்து, மீண்டும் வராமல்

தடுப்பது அவசியம்.

- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,

மதுரை. 94441-54551






      Dinamalar
      Follow us