தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சத்துக்களை உறிஞ்ச நெய் உதவும்!

சத்துக்களை உறிஞ்ச நெய் உதவும்!

சத்துக்களை உறிஞ்ச நெய் உதவும்!


PUBLISHED ON : டிச 26, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 26, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரம்பரிய உணவுகளான, இட்லி, கோதுமை ரொட்டி, பருப்புக் கூட்டு, அவல் போன்றவை சிறந்த உணவுகள். இயற்கை முறையில் விளைந்த பாரம்பரிய அரிசி என்ற பெயரில், 10 மடங்கு விலையில், பல வகையான அரிசி வகைகள் விற்கப்படுகின்றன.

இதெல்லாம் அவசியம் இல்லாதது. நமக்கு பக்கத்தில் என்ன ரக அரிசி விளைகிறதோ, அதை சாப்பிட்டாலே போதும். உடல் எடையைக் குறைப்பதற்கென்றே, 'ஸ்பெஷல்' உணவைத் தேடாமல், அரிசி சாதம், வாழைப்பழம், மாம்பழம், பசு நெய், பருப்பு போன்ற, அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள், பீர்க்கன்காய், கத்தரிக்காய், சுரைக்காய், புடலங்காய் போன்ற நாட்டு காய்கறிகள் சாப்பிடலாம்.

இதனால், உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதுடன், எடையும் குறையும். கேரட், பீன்ஸ் போன்ற ஆங்கில காய்கறிகளை, முடிந்த அளவு தவிர்த்து விடலாம்.

கொழுப்புச் சத்துக்கள், உடலுக்கு அவசியம். நல்ல கொழுப்பு போதுமான அளவு உடலில் இருந்தால் தான், சாப்பிடும் உணவில் உள்ள நுண்ணுாட்டச் சத்துக்களை உறிஞ்சும் தன்மை கிடைக்கும். நெய் தினமும் உணவில் இடம் பெற வேண்டும்.

இதில், 'ஒமேகா - 3, ஒமேகா - 9, விட்டமின் - ஏ, டி, இ, கே' உள்ளன. எனவே, சாதம், ரொட்டியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்வது நல்லது.

ருஜுதா திவேகர்,

'நியூட்ரிஷனிஸ்ட்',

மும்பை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us