தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கணையத்தின் முக்கிய வேலை

கணையத்தின் முக்கிய வேலை

கணையத்தின் முக்கிய வேலை


PUBLISHED ON : டிச 25, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இடுப்பு வலி என்றவுடன், அதிக நேரம் தவறான நிலையில் உட்கார்வதால் இருக்கும் என்று நினைக்கிறோம். செரிமான மண்டலத்தின் முக்கிய அங்கமான, வயிற்றின் பின் பகுதியில் இருக்கும் கணையத்தில் பிரச்னை இருந்து, வலி ஏற்பட்டால், முதுகு வலி வரலாம்.

கணையத்தின் முக்கிய வேலை, செரிமானத்திற்கு தேவையான என்சைம்களை உற்பத்தி செய்து, உணவுடன் கலந்து செரிமானத்திற்கு உதவும். அடுத்த முக்கிய வேலை, கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கும் இன்சுலின்.

போதுமான அளவு இன்சுலின் சுரந்தும், சரியாக பயன்படாவிட்டால், 'டைப் - 2' சர்க்கரை கோளாறும், போதுமான அளவு இன்சுலின் சுரக்காவிட்டால் 'டைப் - 1' சர்க்கரை கோளாறும் இருக்கும்.

கணைய அழற்சி

கணையத்தில் ஏற்படும் தொற்று இது. உயிரை பாதிக்கும் பிரச்னை என்றாலும், உணவு கட்டுப்பாடு, சரியான நேரத்தில் சாப்பிடுவது, மதுப்பழக்கம் இல்லாமல் இருந்தால் தவிர்க்க முடியும். முறையற்ற உணவு பழக்கத்தால், பித்தப் பையில் கற்கள் உண்டாகி, பித்த நீர் குழாய் வழியே கணையத்தை அடைந்து, தொற்றை ஏற்படுத்தலாம்.

இது தவிர, கால்சியம் அளவு அதிகரிப்பது, அதிக கொழுப்பு, ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையாலும் கணையம் பாதிக்கப்படும். மரபியல் காரணிகள், வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வசிப்பவருக்கும் கணைய அழற்சி வரலாம். மதுப்பழக்கமும், பித்தப் பையில் கல் உருவாவதும், தலா, 40 சதவீதம் காரணியாக உள்ளன.

பித்தப்பை கல்

இது பொதுவான பிரச்னையாகி விட்டது. பித்தப்பை கல்லின் அளவுக்கும், பிரச்னைகள் வருவதற்கும் தொடர்பில்லை. 10, 12 மி.மீ., அளவு கல்லை விடவும், 5 மி.மீ.,க்கு குறைவான கற்களே அதிக பாதிப்பை தரும்.

காரணம், இவை எளிதாக பித்தப் பையில் இருந்து, பித்த நீர் குழாய் வழியே கணையத்திற்கு சென்று விடும். செரிமான கோளாறு, வலி இல்லாமல் இருந்தால், பித்தப் பையை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை.

வலி வந்தால், உடனடியாக அகற்றி விடுவதே நல்லது. அதிகப்படியான பித்த நீரை சேமித்து வைப்பதைத் தவிர, இதற்கு வேறு வேலை கிடையாது. அகற்றுவதால், எந்த பிரச்னையும் இல்லை.

பரிசோதனை அவசியம்

நீண்ட காலமாக சர்க்கரை கோளாறு இருந்து, சமீப நாட்களில், சர்க்கரை கட்டுக்குள் இல்லாமல் இருப்பது, 60 வயதிற்கு மேல் முதன்முறையாக சர்க்கரை கோளாறு வருவது, மஞ்சள் காமாலை, காரணம் இல்லாத உடல் எடை குறைவு இருந்தால், உடனடியாக கணைய பரிசோதனை அவசியம்.

டாக்டர் பி.செந்தில்நாதன்,

ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர்,

சென்னை.

044 - 6166 6666


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us