ஹெல்த் கார்னர்: தேனும் வெங்காயமும்.. பாலும் பூண்டும்...
ஹெல்த் கார்னர்: தேனும் வெங்காயமும்.. பாலும் பூண்டும்...
PUBLISHED ON : ஜூலை 27, 2016

தினமும் காலையில் வெறும் வயிற்றில், சின்ன வெங்காயச் சாறு 20 மில்லியுடன், அதே அளவு தேன் கலந்து சாப்பிடுவதால், உடல்சூடு, மூலம், பித்தத்தால் ஏற்படும் சிரங்குகள், வாய்ப்புண், சூட்டினால் ஏற்படும் பேதி குணமாகும். சிறுநீரை அதிகம் பெருக்கும், இதயத்திற்கு பலம் தரும். பசியைத் துாண்டும். உணவைச் செரிக்கச் செய்யும். உடலில் பொலிவு, அழகு, வலிவு அதிகரிக்கும். இரவில் பூண்டை பாலில் போட்டு வேகவைத்து சாப்பிடுவதால், நரம்பு மண்டலத்தைத் துாண்டி வலுப்படுத்தும். இடுப்புப் பிடிப்பு, சயாடிகா எனப்படும் இடுப்பு முதல் பின் தொடை வழியாகச் செல்லும் நரம்புச் சுருட்டல், முகத்தில் ஏற்படும் பக்கவாதம், உடலில் ஒரு பக்கத்தை செயலிழக்கச் செய்யும் பக்கவாதம், தொண்டை சார்ந்த உபாதைகள், சீலவாயு போன்ற நோய்களை இதன் மூலம் தவிர்க்கலாம். வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள், பாலில் பூண்டை வேகவைத்து சாப்பிடலாம். அதிகபட்சம் 4 பல் பூண்டிற்கு மேல் வேண்டாம்.
டாக்டர் எஸ்.சுவாமிநாதன்
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லுாரி
94444 41771
