
பற்களை பாதுகாக்க...
* இரவில் படுப்பதற்கு முன் பல் துலக்க வேண்டும்.
*ஆறு மாத குழந்தையிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒருமுறை டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
*பல் இடுக்குகளில் சிக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட அரைமணி நேரத் திற்குள் வாய் கொப்பளித்தல், பிரஷ் செய்தல், பல் குத்தி மூலம் அகற்றி விட வேண்டும்.
* சொத்தைப் பற்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அடைக்க வேண்டும்.
* ஈறு நோயினால் பற்களை இழக்காமல் இருக்க ஈறுகளில் ரத்தம் கசிதல், வீக்கம், வாய் துர்நாற்றம், பல்காரை படிதல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
*பற்களை இழக்க நேரிட்டால் நான்கு மாதத்திற்குள் செயற்கை பல் பொருத்த வேண்டும்.
* சுழற்றக்கூடிய செயற்கைப் பல் மற்றும் கிளிப் அணிந்திருந்தால் ஒவ்வொரு முறையும் உணவுக்கு பின் கழற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
* முன்பு சிகிச்சைப் பெற்ற, அடைத்த பற்களில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் டாக்டரை அணுக வேண்டும்.

