தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி-பதில்

கேள்வி-பதில்

கேள்வி-பதில்


PUBLISHED ON : ஜூலை 22, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

 நீரிழிவு நோயாளிகளுக்கு, 'ரெட்டினோபதி' பாதிப்பு ஏற்பட்டு பார்வை பறிபோகுமா?

சுதர்சனம், திருச்சி.


பெரும்பாலான, நீரிழிவு நோயாளிகளுக்கு, பார்வை இழப்பு ஏற்படுத்தும், முக்கியமான காரணிகளில் ரெட்டினோபதியும் ஒன்று. நீரிழிவு நோயாளிகளில், பலருக்கு, ரெட்டினோபதி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோய் தாக்கிய உடனே, ரெட்டினோபதி பாதிப்பு ஏற்படாது. ஆனால், நீரிழிவை கட்டுக்குள் வைக்காத போதுதான், பாதிப்பு ஏற்படும். நெடுங்காலமாக அதாவது, ஆண்டுக்கணக்கில் நீரிழிவு உள்ளவர்கள், மருத்துவரின் அறிவுரைப்படி, கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நீரிழிவு ரெட்டினோபதி இருந்தால் கண்ணின் ரெட்டினோபதி பகுதி பாதிக்கப்பட்டு, பார்வை இழப்பு ஏற்படும்.

சுகுமார், நீரிழிவு நிபுணர்.

 என் அம்மாவிற்கு, 65 வயதாகிறது. சீரான உணவு பழக்கத்தை மேற்கொள்ள மறுக்கிறார். வயதானவர்களுக்கு, எவ்வகையான உணவுகளை கொடுக்கலாம்?

ப்ரியா, மாதவரம், சென்னை.

வயதானோருக்கு, உட்கொள்ளும் உணவுகள், ஜீரணமாகாமல் செரிமானப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. உடல் உழைப்பு குறைவதால் செரிமானம் குறையும்; எனவே, சரியாகப் பசிக்காது. அதுமட்டுமல்லாமல், வயதாக வயதாக, தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற தாழ்வுமனப்பான்மையும் மனதில் தோன்றிவிடுவதால், செரிமானப் பிரச்னைகளும் சேர்ந்து கொள்கின்றன. வயதானவர்களுக்கு செரிமான பிரச்னைகள் தோன்றாமல் இருக்க, எளிதில் செரிக்க கூடிய, நார்ச்சத்துள்ள உணவுகளை, சாப்பிடக் கொடுக்கலாம். பால், கேழ்வரகு, குறுதானியங்கள், ஆரஞ்சு, வாழை, கொய்யா மற்றும் காய்கறிகள் சாலட்களை கொடுக்கலாம்.

ரகுவரன், முதியோர் நலன் மருத்துவர், சென்னை.

 என் வயது 32. விளம்பர பிரிவில் பணிபுரிகிறேன். மருத்துவர் எனக்கு கணைய அழற்சி இருக்கிறது என்கிறார். அப்படி என்றால் என்ன?

சுரேந்தர், பி.பி. ரோடு, சென்னை.

பித்தப்பை கல்கூட, கணையத்தை பாதிக்கலாம். பித்தப்பை கல் காரணமாக, கணையத்தில் இருந்து சிறுகுடலுக்குச் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கணைய நீரானது, மீண்டும் கணையத்திற்கே செல்லத் தயாராகும். இதனால், கணைய செல்கள் பாதிக்கப்பட்டு, கணைய அழற்சி ஏற்படலாம். முன்கூட்டியே, என்ன பாதிப்பு என்பதை தெளிவாக கண்டறிந்துவிட்டால், பாதிப்பை தவிர்க்கலாம். கணையத்தை பாதுகாக்க, இறைச்சிகளை குறைத்துக் கொள்ள வேண்டும். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

இளங்கோவன், பொது மருத்துவர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us