தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/22 ஜனவரி 2015: ஒருடாக்டரின் டைரிகுறிப்பு

22 ஜனவரி 2015: ஒருடாக்டரின் டைரிகுறிப்பு

22 ஜனவரி 2015: ஒருடாக்டரின் டைரிகுறிப்பு


PUBLISHED ON : ஜூலை 22, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

அன்று பரபரப்பாக,

இயங்கிக் கொண்டிருந்தேன். காரணம், புற நோயாளிகள் பிரிவில், என்னை சந்திக்க வந்த, குழந்தைகள் ஏராளம் பேர் காத்திருந்தனர். காத்திருப்பு பெரியவர்களுக்கே, மிகவும் அவஸ்தையான ஒன்று, எனும் போது, குழந்தைகளுக்கு எவ்வாறு இருக்கும். அதனால் தேநீர் கூட அருந்தாமல் அவர்களை கவனித்து கொண்டிருந்தேன்.

அன்று வந்திருந்த, அனைத்து குழந்தைகளையும், பார்த்தாகிவிட்டது. வீட்டிற்கு செல்லலாம் என்று, எத்தனிக்கையில், என் அறைக்கு வெளியே இரண்டு பிஞ்சுக் கால்கள் தென்பட்டன. பிஞ்சுக் கால்களுக்கு சொந்தக்காரனின், பெயர், ப்ரின்ஸ். அவனுடைய அப்பா பிசியான சாப்ட்வேர் இன்ஜினியர். அம்மா மெடிக்கல் ரெப்ரசன்டெட்டிவ். ப்ரின்ஸ், 32 வாரத்தில் பிறந்த குறைமாத குழந்தை. ஆனால், நல்ல வளர்ச்சியுடன், ஆரோக்கியமான குழந்தையாகவே இருந்தான்; உடல் ஆரோக்கியத்தில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால். ப்ரின்சின் கால்கள் சற்றே வளைவாக இருந்தன. அதாவது. கோணைக் கால்கள்.

இதனால். ப்ரின்சின் பெற்றோர் கவலையுற்று, தன் குழந்தைக்கு காலில் ஏதோ பிரச்னை உள்ளது என்று எண்ணினர். முதலில். ப்ரின்சிற்கு வைட்டமின் - டி மற்றும் கால்சியம்

பரிசோதனைகள் எக்ஸ் - ரே

செய்யச் சொன்னேன். பரிசோதனை முடிவில் ப்ரின்சிற்கு வைட்டமின் - டி பற்றாக்குறையாக உள்ளது என்று தெரிய வந்தது. ப்ரின்சின் பிரச்னை, நோயோ, குறைபாடுகளோ, கிடையாது. அது இயற்கையானது தான். நம்மில் பலர். கறுப்பாகவும், சிலர் சிவப்பாகவும். மாநிறமாகவும் இருக்கின்றனரே அதுபோன்று தான். சிலருக்கு கால்கள் நேராகவும், கோணையாகவும் இருக்கும்; அது பிரச்னையே அல்ல.

90 சதவீத, குழந்தைகளுக்கு, கால்கள் இவ்வாறு, உள்ளதற்கு காரணமே இல்லை. ஆனால், இப்பிரச்னை குழந்தைகள், வளர வளர தானே சரியாகிவிடும். பிரச்னையே இல்லாத விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, சில பெற்றோர், தங்கள் குழந்தையின் கால்கள் சரியில்லை என்று, மனதளவில் பாதிப்படைகின்றனர். இதற்கு, முடநீக்கியல் பயிற்சிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்யலாமா, அல்லது விசேஷ காலணிகள் அணியலாமா என்றெல்லாம், யோசனை செய்கின்றனர். அது தவறு. சில குழந்தைகளுக்கு கால்கள் உள்நோக்கியோ, வெளிநோக்கியோ வளைந்திருப்பது சாதாரணமான ஒன்று. ஆனால், ஏதாவது ஒரு கால் மட்டும் இயல்புக்கு மாறாக வளைந்திருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இரண்டு வயதுக்கு, மேல் குழந்தை நடக்க ஆரம்பித்து, நடக்க நடக்க கோணைக்காலின் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே, சென்றால் கட்டாயம் கவனிக்க வேண்டும். முன்பெல்லாம் இது போன்ற குறைபாடுகளுக்கு காரணம், ஊட்டச்சத்து குறைபாடாக இருந்தது. தற்போது குழந்தைக்கு, நாம் கொடுக்கும் அதீத பாதுகாப்பே, அவர்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. தற்போது நடுத்தர குடும்பத்து வீடுகளிலும், காரிலும்

'ஏசி' உள்ளது. எப்போதும் ஏசியிலேயே அடைபட்டிருப்பதால், சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் நுண்ணுாட்ட சத்தான

ைவட்டமின் - டி கிடைக்காமலே போகிறது. குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதில்லை. கறுத்துப் போவர் என்று. வீட்டுக்குள்ளேயே வைப்பதால்

வைட்டமின் - டி குறைபாடு ஏற்பட்டு, பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. ப்ரின்சின் பிரச்னைக்கு ஒரே தீர்வு வெயிலில் விளையாட வைப்பது என்று, பெற்றோருக்கு தைரியம் கொடுத்து அனுப்பி வைத்தேன்.

- ஆர்.சங்கர்,

குழந்தைகள் நல எலும்பு

முறிவு சிகிச்சை நிபுணர்.

அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனை, சென்னை.

99625 82525

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us