தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : ஜூலை 22, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

1நம் உடல் செயல்பாட்டில் மரபணுக்களின் பங்கு என்ன?

நம் உடலில் இருக்கும், ஒவ்வொரு திசுக்களையும் சீராக ஒருங்கிணைத்து, இயக்குவது திசுக்களின் செல். செல்லுக்குள் இருப்பது கரு; கருவுக்குள் இருப்பது மரபணுச்சரங்கள். அவற்றில் இருப்பதுதான் மரபணு. மூளையின் கட்டளைப்படி செயல்படும், நம் உடம்பின் இயக்கம் போன்று, கருவுக்குள் இருக்கும் மரபணுச்சரங்களும் செயல்படுகின்றன. இந்த மரபணுச்சரங்களில் கிட்டத்தட்ட, 20 ஆயிரம் முதல் 25

ஆயிரம் மரபணுக்கள் இருக்கும். இந்த மரபணுக்களை மூளைத்திசுவின்

செல் எனக் கூறலாம்.

2மரபணுக்கள் நோய்களை உண்டாக்குமா?

மரபணுச்சரங்களிலுள்ள மரபணுக்கள், சீராக இயங்கும்போது உடலும் சீராக இயங்குகிறது. மரபணுக்களில் பிழைகள் நிகழும்போது, அம்மரபணு செயல்பாட்டினை இழக்கிறது. செயலிழந்த மரபணு, எந்த திசுக்களின் செயல்பாட்டினை இயக்கியதோ, அத்திசுவின் செயல்பாடு குறைந்து நோய் ஏற்படுகிறது. உதாரணமாக புற்றுநோய், வலிப்பு, தசை மற்றும் நரம்பு நோய்களை குறிப்பிடலாம்.

3உணவு மற்றும் மருந்து ஒவ்வாமைக்கும் மரபணுக்களுக்கும் சம்பந்தம் உண்டா?

நிச்சயமாக உண்டு. சிலருக்கு கோதுமை சேர்த்த உணவு வகைகளை உட்கொள்ளும்போது, தோலில் அரிப்பு, தோல் அரிப்புடன் கூடிய வீக்கம், மூச்சடைப்பு மற்றும் கல்லீரல் குறைபாடு ஆகியவை ஏற்படும். இது ஆங்கிலத்தில், 'குளூடென் அலர்ஜி' என கூறப்படுகிறது. இதே போன்று சில மருந்து வகைகளும் ஒவ்வாமை நோயை ஏற்படுத்தவல்லது. இது போன்ற ஒவ்வாமை நோய் மரபணுக்களிலுள்ள சில மாற்றங்களால் நிகழ்கின்றன.

4எந்த மாதிரியான மருந்துகள் ஒவ்வாமை நோயை ஏற்படுத்துகின்றன?

வலிப்பு, நீரிழிவு, இதய நோய்களை கட்டுப்படுத்தும் மருந்துகள், சில வகை வலி நிவாரணிகள் மற்றும் புற்றுநோய் கட்டுப்படுத்தும் மருந்துகளும் ஒவ்வாமை நோயை ஏற்படுத்த காரணமாக அமைகின்றன.

5மருந்துகளின் செயல்பாட்டிற்கும், உட்கொள்ளும் அளவிற்கும் மரபணுக்களுக்கும் சம்பந்தம் உண்டா?

சந்தேகமே வேண்டாம். நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு மருந்தின் அளவும், உண்ட மருந்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதிலும், செயல்பட்ட மருந்தை உடம்பிலிருந்து அகற்றுவதிலும் மரபணுக்களின் பங்கு இன்றியமையாதது. உதாரணமாக, மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு, மருந்தை எந்த அளவு எத்தனை முறை கொடுப்பது என்பது, மரபணுக்களின் சரவரிசைகொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.

6உடல் பருமனுக்கும், பருமனை குறைப்பதற்கும், மரபணுக்களுக்கும் சம்பந்தம் உண்டா?

பசியின் அளவுகோலை நிர்ணயிப்பதும் மரபணுக்களே. அதேபோன்று, பருமனை குறைக்க எவ்வளவு உடற்பயிற்சி தேவை, உடற்பயிற்சியால் பருமன் குறையுமா என்பதையும் மரபணுக்களே முடிவு செய்கின்றன.

7ஒருவருக்கு எவ்வகையான நோய்கள் எதிர்காலத்தில் தாக்குமென்று, மரபணு பரிசோதனை வழியாக தெரிந்து கொள்ளலாம்?

சிறுநீரக கோளாறுகள், நீரிழிவு, ரத்த அழுத்தம், பக்கவாதம், வலிப்பு, மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் மார்பக புற்று, வாய்ப்புற்று மேலும் சில வகை புற்றுநோய்கள் போன்றவை, மரபணு வழியாக கடத்தப்படும் என்று அறியலாம்.

8மரபணு பரிசோதனைகள் எவ்வாறு செய்துகொள்ள வேண்டும்?

1 மி.லி., உமிழ்நீர் கொடுத்தால் போதுமானது. உமிழ்நீர் செல்களின் மரபணுக்களை பரிசோதித்து உணவு, மருந்து அளவு மற்றும் ஒவ்வாமைகளை அறிந்து கொள்ள முடியும்.

9 எவ்வளவு செலவாகும்?

பரிசோதனைகளைப் பொறுத்து, 1,500 முதல் 5,000 ரூபாய் வரை ஆகலாம். இவ்வகை மரபணு சார்ந்த மருத்துவம், 'தனிமனித மருத்துவம்' என அழைக்கப்படுகிறது.

10எங்கு செய்யலாம்?

மேலைநாடுகளில் மரபணு பரிசோதனைகள் செய்யாமல், மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. தற்போது இம்மருத்துவ முறை, இந்தியாவில் வளர்ந்து வருகிறது. புதுடில்லி, மும்பை மற்றும் சென்னையில் இவ்வகை பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

- அரவிந்த் ராமநாதன், மரபியல் ஆராய்ச்சி நிபுணர்.

ஸ்ரீ பாலாஜி பல் மற்றும் பொது மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை, சென்னை.

96000 24619

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us